சிறுகதை

சீரியல் தவிர் |ஆர்.எஸ்.மனோகரன்

யிற்று; இன்றோடு அசோக் – ரேஷ்மாவக்கு திருமணமாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. மணமகள் ரேஷ்மா.

மேகமலையில் உள்ள நண்பனின் விருந்தினர் மாளிகைக்கு புது மனைவி ரேஷ்மாவுடன் தேன் நிலவிற்கு சென்று நேற்று திரும்பினான் அசோக் .பின் அவன் இன்று மீண்டும் அலுவலகம் புறப்பட்டான். மனைவி ரேஷ்மா கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடித்திருந்தாலும் சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தாள். இப்போது ஹவுஸ் வைஃப். மாமனார் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. மாமியார் புஷ்பா ஓய்வு பெற்ற அரசு முதுகலை ஆசிரியை.

ஞ்ச் முடிந்ததும் ரேஷ்மா சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தாள்.

ஏதோ சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. பிறந்த வீட்டில் சீரியல் பார்த்து கொண்டிருந்த ரேஷ்மாவுக்கு. அதனை தொடர ஆர்வம். அடுப்பறையில் இருந்து வெளியே வந்த மாமியார் புஷ்பா ரேஷ்மாவை அழைத்துக்கொண்டு வீட்டுத் தோட்டத்திற்கு போனாள். பசுமையான மரம், செடி கொடிகளையும் அவற்றில் காத்திருந்த காய்கள்,பழங்களையும் தொட்டுப் பார்த்து என்னோட உழைப்பில் வந்தது என பூரிப்பு அடைந்தாள் புஷ்பா. பசுமையான தோட்டத்தை பார்த்ததும் ரேஷ்மாவிடமும் ஒரு விதமான ஈர்ப்பு வந்தது. அவளும் தோட்டத்தை ரசிக்கத் தொடங்கினாள்.

மாலையில் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று மங்கிய மாலை வேளையில் மறையும் சூரியனையும் மேகக் கூட்டத்தையும் காட்டி அங்கு விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவர்களோடு ரேஷ்மாவை இணைத்து விட்டு சிறுவர்களின் விளையாட்டுகளில் ஈடுபாடு காட்ட வைத்தாள் புஷ்பா.

மாலை இரவாகி வானத்தில் மின்னிய இனிய நட்சத்திரங்களின் அழகை மருமகளுக்கு காட்டி ஆர்வமூட்டிய மாமியார். கீழே போய் இரவு உணவை தயார் செய்து மேலே கொண்டு வந்து தன் கணவர்,மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து உண்பதில் சந்தோஷம் கண்டாள். இனி வரும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதத்தில் தன் மருமகளின் ஓய்வு நேரத்தை வித்தியாசமான முறையில் கழிக்க என்னென்ன செய்யலாம் என யோசித்தாள் மாமியார் புஷ்பா.

தியம் முதல் இரவு தூங்கும் வரை வெவ்வேறு டிவி சீரியல்களில் வரும் மாமியார் கொடுமை,மருமகள் மாமியார் எப்படி எல்லாம் திட்டம் போட்டு வில்லத்தனம் பண்ணி குடும்பத்தை கெடுப்பது என்பதை பெண்களுக்கு சொல்லித்தருவது மனைவி இருக்கும் போதே மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க சகுனித்தனம் பண்ணும் மாமியார், உறவுகளுக்குள் கலகத்தை மூட்டி விடும் பெண்கள் என இப்படி பெண்களை வைத்து குடும்பத்தை சீரழிக்கச் சொல்லித்தரும் சீரியல்களை பார்ப்பதை தவிர்ப்பதற்காக மாமியார் புஷ்பா எடுத்த முயற்சி வெற்றியடையும் என்பது அடுத்த நாள் முதல் ரேஷ்மா மாமியாருடன் நெருங்கிப் பழகி உருப்படியான வழிகளில் நேரத்தை போக்க ஐடியாக்களை கேட்டுக்கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *