செய்திகள்

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானார்

பீஜிங், அக். 27–

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் காலமானாதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவில் 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பணியாற்றியவர் லீ கெகியாங் (வயது 68). முற்போக்கு சீர்திருத்த எண்ணம் கொண்ட இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராவார். ஷாங்காய் நகரில் வசித்து வந்த இவர், திடீரென மாரடைப்பால் காலமானதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.

நள்ளிரவில் உயிரிழப்பு

அண்மை நாட்களில் ஷாங்காய் நகரில் ஓய்வெடுத்து வந்த லீ கெகியாங்கிற்கு, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரை காப்பாற்ற எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ள சீன ஊடகங்கள், நள்ளிரவில் 12.10 மணிக்கு அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. விரைவில் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும், அதன் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சீன ஊடகங்கள் கூறியுள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து அதிகாரமும் உள்ள பொலிட் பீரோ நிலைக்குழுவில் இருந்து கடந்த அக்டோபரர் மாதம் லீ கெகியாங் வெளியேறினார். சீன அதிபராக ஜி ஜின்பிங் பதவியேற்ற பின்னர், அரசியலில் இருந்து சற்று விலகியிருந்த லீ, ஷாங்காயில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *