செய்திகள்

சீன துணை பிரதமருடன் 31–ந் தேதி அதிபர் டிரம்ப் வர்த்தக பேச்சுவார்த்தை

வாஷிங்டன்,ஜன.29–

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிற 31–ந் தேதி சீன துணை பிரதமருடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் இருந்து வந்தது. இதனால் சர்வதேச அளவிலான பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டது. அமெரிக்கா சீன இறக்குமதிகள் மீது தொடர்ந்து கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை உயர்த்தியது.

இந்த நிலையில், இரு தரப்பு வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்துகிற வகையில், ஜனவரி 1 ந் தேதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்து கொண்டன. இது 90 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா, சீனா இடையே நீடித்து வந்த வர்த்தக போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு பெண் அதிகாரி சாரா ஹக்காபீ சான்டர்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சீனாவின் துணை பிரதமர் லியு ஹீ இந்த வாரம் அமெரிக்காவுக்கு வருகை தருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவரை சந்தித்து வர்த்தக விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *