பெய்ஜிங், ஆக. 2–
சீன தலைநகர் பெய்ஜிங்கைச் சுற்றிலும் வழக்கத்துக்கு அதிகமாக பெய்து வரும் கன மழை காரணமாக அந்தப் பகுதியில் ஏற்றப்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 20 பேர் பலியாகி உள்ளனர்.
இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறியுள்ளதாவது:–
சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் முழ்கின. சாலைகளிலும் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து இணைப்பு துண்டிக்கப்பட்டது.
20 பேர் பலி
இதில் 20 பேர் பலியாகி உள்ள நிலையில் 27 பேர் மாயமாகி உள்ளனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங் பிராந்தியத்தில் பொதுவாக மிதமாகவே மழை பெய்யும். அங்கு இந்த அளவுக்கு மழை பெய்து இத்தனை அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது மிகவும் அபூர்வமானது என்றும் கூறப்படுகிறது.