செய்திகள்

சீனாவில் 2வது நாளாக சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி

பீஜிங், மே 22–

சீனாவில் நேற்று மாலையும் இன்று அதிகாலையும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலியில் நேற்று (மே 21) மாலை 7:18 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது. அதேபோல் இன்று அதிகாலை 3:00 மணியளவில் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆகவும் பதிவானது.

இந்த நிலநடுக்கங்களால் பல வீடுகள் இடிந்தன. இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர்; 23க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். முழு சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *