பீஜிங், ஜன.8–
சீனாவில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 17 பேர் பலியானார்கள்.
கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை நன்சாங் கவுண்டி பகுதியில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டது. இதில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடும் பனி மூட்டத்தால் எதிரே வந்த வாகனங்கள் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேகத்தை குறைத்து கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.