போஸ்டர் செய்தி

சீனாவில் அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம்: 12 பேர் பலி, 134 பேர் காயம்

Spread the love

பெய்ஜிங்,ஜூன் 18–

சீனாவில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 12 பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்ததால், 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கள் கிழமை) இரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2வது நிலநடுக்கம் இன்று காலை மீண்டும் ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.

அடுத்தடுத்த இரு நிலநடுக்கங்களால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்தனர். உயரமாக கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து, அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி தெருகளுக்கு வந்தனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சுமார் ஒரு நிமிடம் நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 12 பேர் பலியானதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 134 பேர் காயம் அடைந்தனர். 10 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்ததால், 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்டை மாநிலமான யுனான் மாகாணத்திலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர முடிந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

சிச்சுவான் பகுதி வழக்கமாக நிலநடுக்கம் அதிகமாக ஏற்படும் பகுதியாக இருந்தாலும், கடந்த 2008ம் ஆண்டு, 7.9 என்ற அளவில் அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 87 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *