புதுடெல்லி, ஏப்.25-
சீனர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசா ரத்து செய்து இந்திய அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா பரவத் தொடங்கியவுடன், 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் இருந்து சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்தனர்.
சீன கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இருப்பினும், இந்திய மாணவர்கள் சீனா வருவதற்கு சீனா அனுமதி மறுத்து வருகிறது. இதனால், அம்மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை சீனாவின் கவனத்துக்கு இந்தியா எடுத்துச் சென்றும் சீனா பிடிவாதமாக உள்ளது.
இந்நிலையில், சீன நாட்டினருக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கான சுற்றுலா விசாக்களும் ரத்து செய்யப்பட்டன.