கோவை, செப். 10–
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி நுரையீரல் தொற்றுக்காரணமாக கடந்த மாதம் 19ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.