பிப்ரவரி 15-ல் தொடங்கி ஏப்ரல் 4 வரை நடக்கிறது
புதுடெல்லி, நவ.21-–
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15–ம் தேதி துவங்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது. இதன்படி, 10 மற்றும் 12–ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15–ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18–ம் தேதியும், 12–ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 4ம் தேதியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான அட்டவணையை சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in மாணவர்கள் பார்க்கலாம். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை, 86 நாட்களுக்கு முன் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் வெளியிடுவது இதுவே முதல்முறை.