செய்திகள்

சிவகாசியில் 19 இடங்களில் ஆவின் பாலகம் திறப்பு

சிவகாசி, பிப்.18–

சிவகாசியில் 19 இடங்களில் ஆவின் பாலகங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

தமிழக அரசின் ஆவின் பொருட்கள், ஆவின் பாலை பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆவின் பூங்கா மற்றும் ஆவின் பாலகங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் ஸ்டாண்டர்டு காலனி, அண்ணா காலனி, சரவணா எம்பாசி கல்யாண மண்டபம் அருகில், சிவகாசியில் எஸ்.எப்.ஆர் கல்லூரி அருகில், காரனேசன் பஸ் ஸ்டாப் அருகில், இ.பி ஆபிஸ் முன்பு, காரனேசன் கூட்டுறவு பண்டக சாலை அருகில், வம்பிழுத்தான் முக்கு, பழைய விருதுநகர் ரோடு, சிவகாசி அருகே பாரதி நகர், மணிநகர் விஸ்வநத்தம் மெயின்ரோடு, விஸ்வநத்தம் பெருமாள் கோவில் அருகில், சிவகாசி காமராஜர் சிலை அருகில், சிவகாசி இரட்டைப் பாலம் அருகில், ஆலங்குளம் ரோடு மாரனேரி, ரிசர்வ் லயன் தேவர் சிலை, சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முன்பு, செங்கமலநாச்சியார்புரம் மூக்கு, எம். புதுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் என மொத்தம் 19 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைச்சர் திறந்து வைத்து ஆவின் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ராஜாகுமார், ஆவின் சேர்மன் கண்ணன், சிவகாசி ஒன்றியக் கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, சுப்ரமணியன், தெய்வம், திருத்தங்கல் நகரச் செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி நகரச் செயலாளர் அசன்பதுருதீன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சுபாஷினி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன் ஆணையூர் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி நாராயணன், விஸ்வநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ், சிவகாசி இளைஞரணி ஒன்றியச் செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் செல்வம், நகர இளைஞர் பாசறை பெரியசாமி, சிவகாசி ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அ.செல்வம், கிருஷ்ணமூர்த்தி, ரமணா, தலைமை கழகப் பேச்சாளர் சின்னத்தம்பி, என்.ஜி.ஓ. காலனி மாரிமுத்து, நாராணபுரம் ஊராட்சி செயலாளர் ஏ.எஸ். மாரிக்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *