செய்திகள்

சிவகங்கையில் 600 பயனாளிகளுக்கு அசில் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

சிவகங்கை, பிப்.4–

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சாலூர் மற்றும் காளையார்கோவில் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பயனாளிகளுக்கு விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கி பேசுகையில்:–

தமிழ்நாடு முதலமைச்சர் வறுமையிலுள்ள குடும்பங்கள் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்குடன் கறவைமாடு மற்றும் ஆடுகள் போன்ற விலையில்லா திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு பயன்பெற்று வருகிறார்கள். மேலும், தனிநபரின் பொருளாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் பெண்கள் இணைத்தொழிலாக கோழி வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், 2020-2021-ஆம் ஆண்டிற்கு பயனாளிகள் தேர்வு செய்து அவர்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கும் வகையில் ஏழை, எளிய, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 4,800 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.94.32 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்க திட்டமிட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பயனாளிக்கும் 4 வாரம் வயதுடைய முறையே தடுப்பூசிகள் போடப்பட்டு வளர்க்கப்பட்ட விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள் தலா 25 வீதம் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 400 பயனாளிகள் வீதம் மொத்தம் 4,800 பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டு அதன் அடிப்படையில் சாலூர் ஊராட்சியில் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகளுக்கு உட்பட்ட 200 பயனாளிகளுக்கும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகளுக்கும் வழங்கும் வகையில் இன்று விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பயன்பெறும் பயனாளிகள் கோழிக்குஞ்சுகளை நன்றாகப் பராமரித்து தனிநபர் பொருளாதாரம் முன்னேற்றம் பெறவேண்டும். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் தகுதியுடைய பயனாளிகளுக்கு விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்படுவதுடன் மற்றும் எண்ணற்ற அரசின் திட்டங்கள் பயனாளிகளின் தேவைக்கேற்ப அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை ஒவ்வொருவரும் நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற்றுக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.முருகேசன், கால்நடைப் பராமரிப்புத்துறை துணை இயக்குநர்கள் மரு.ஜோசப் அய்யாத்துரை, மரு.முகமதுகான், கால்நடை மருத்துவர்கள் கோபிநாத், மரு.நந்தினி, மரு.சசிக்குமார், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரி,

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன், சாலூர் ஊராட்சி மன்றதலைவர் நாச்சம்மாள் அர்ச்சுனன், மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் தலைவர்கள் செல்வமணி, பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டீபன், மற்றும் கால்நடைத்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *