வாழ்வியல்

சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயல்பாடுகள்; கண்டுபிடிப்புகள்–2

Spread the love

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான புதுமை கண்டுபிடிப்பு அமைப்புகளை வளர்த்தெடுப்பதில் அரசின் பங்கு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே இருப்பதால், இத்துறை கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி தொகுப்பு மேம்பாடு போன்ற நவீன தொழில் துறை தத்துவங்கள் இந்தியாவில் போதிய அளவில் பயன்படுத்தப் படுவதில்லை.

அவைகள் புறக்கணிக்கப்படுகின்றன. 2013ம் ஆண்டு இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு கொள்கையை அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. அதில் புதுமை கண்டுபிடிப்புக்கான சூழல் அமைப்புக்கு உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது.

புதுமை கண்டுபிடிப்பு பணியில் தனியார் துறைகளில் பணியை அதிகரிக்கவும், வகை செய்யப்பட்டுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி மானியம் வழங்குவது மட்டுமின்றி புதிய இயந்திரங்களை வாங்குவதற்கு ஊக்கத்தொகை வழங்குவது பெறுவதற்குரிய விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், புதிய கருவிகள், பயிற்சிகள் மற்றும் வல்லுநர் ஆலோசனை களை பெறுவதற்கு உதவுதல், புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை நமது சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சகம் செய்து வருகிறது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சாராத கண்டுபிடிப்புகளுக்கு அதாவது, அமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் சார்ந்த கண்டுபிடிப்புகள், மேலாண்மை மற்றும் சந்தை நடைமுறையில் வல்லமை பெற்ற பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சாராத கண்டுபிடிப்புகளுக்கு அதாவது அமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் மேலாண்மை மற்றும் சந்தை நடைமுறையில் வல்லமை பெற்ற பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

திறமையும் பயிற்சியும் பெற்ற பணியாளர்களின் பற்றாக்குறைதான் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக உள்ளன. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் நிதி நெருக்கடி காரணமாகவும் அதிக திறனுள்ள பணியாளர்களை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணி நியமனம் செய்ய முடியவில்லை. சரியான உள் மேலாண்மை கட்டமைப்பு இல்லாதது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புதுமை கண்டுபிடிப்பு திறனையும் அதன் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் கடுமையாக பாதிக்கும்.

புதுமை கண்டுபிடிப்புகளை நிகழ்த்தக்கூடிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 87% கும் மேலாக உள் மற்றும் வெளி ஆதாரங்களிலிருந்து மிகக் குறைந்த அளவில் மட்டுமே நிதி உதவியை பெற கூடியதாகவோ அல்லது நிதி உதவியைப் பெறும் திறன் அற்றவையாக உள்ளன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதுமை கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் மூன்று சிக்கல்கள் உள்ளன. முதலாவது புதுமை கண்டுபிடிப்புகளுக்கான செலவு மிகவும் அதிகமாகும்.

இரண்டாவது புதுமை கண்டுபிடிப்பு உத்திகளை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் அவற்றில் இல்லை. மூன்றாவது வெளி ஆதாரங்களிலிருந்து சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே நிதியுதவி பெறும் என்பதால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் பல தடைகள் உள்ளன.

எனவே புதுமை கண்டுபிடிப்புகளுக்கான செலவைக் குறைத்தல், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து புதுமை கண்டுபிடிப்பதற்கான மூலதனங்கள் எளிதாக கிடைக்க வகை செய்தல் ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் சவாலை முறியடிக்க வேண்டியது அவசியமாகும். இந்த வசதிகள் செய்து தரப்படும் பட்சத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் உலகளாவிய போட்டித்தன்மை , ஏற்றுமதி ஆகியவை பாதிக்கப்படுவதுடன், அவற்றின் உள்ளூர் சந்தை பங்கும் கடுமையாக பாதிக்கப்படும்.

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தையை இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் அதேவேளையில் சந்தை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை உள்ளூர் தொழில் துறை நிறுவனங்களுடன் இணைந்து சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *