எப்போதும் கூட்டமாக நிரம்பி வழியும் அந்த வங்கியில் ஒரு மாலை நேரத்தில் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. அந்த வங்கி ஊழியர்கள் சலித்துக் கொண்டார்கள். .
“என்ன இது காலை மாலை என்று எந்நேரமும் மக்கள் நம்மை வேலை செய்ய விடாம தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று வங்கி வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது,வங்கியில் நுழைந்த சீலன் தன் கையில் பாஸ் புத்தகத்துடன் நுழைந்தான். வங்கி ஊழியர்கள் எந்த பரபரப்பும் இல்லாமல் சாதாரணமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
ஒரு ஊழியரிடம் சென்ற சீலன்
” ஐயா என் பாஸ்புக் மூணு மாசமா என்ட்ரி போடல. போட்டு தர முடியுமா ?
என்று கேட்க
“இல்லைங்க அதுக்கு எல்லாம் டைம் இல்ல . வெளிய தான் மெஷின் இருக்குல்ல அதுல போடலாமே? இதெல்லாம் சாதாரண வேலை தானே ” என்று தன் மேல் உள்ள குறையை சீலன் மேல் திணித்தார் அந்த வங்கி ஊழியர்.
” இல்ல சார் என்னுடைய கிளையில அந்த வசதி இல்ல. அதனால தான் இங்கே வந்தேன். நீங்க பண்ணிக் கொடுத்தா நல்லா இருக்கும் ” என்று இன்னொரு முறை கேட்க
” முடியாது ஒரு வாரம் கழிச்சு வாங்க. இப்ப ரொம்ப பிசியா இருக்கு ” என்று தட்டிக் கழித்தார் அந்த ஊழியர்.
“ஒரு வாரம் கழிச்சு வந்தா மட்டும் நீங்க பண்ணி கொடுத்துடுவீங்களா ?என்ன அரசாங்க வேலை ஒன்னு கிடைச்சிட்டா தன்னோட ஆணி வேர வேற யாராவது அசைக்க முடியாது அப்படிங்கற மமதைல தான் நிறைய அரசாங்க ஊழியர்கள் வேலை பார்த்துகிட்டு இருக்காங்க. அது தப்பு மனுஷங்களை மனுஷனா மதிக்க வேண்டியது தான் ஒவ்வொரு மனிதனுடைய கடமை ” என்று கொஞ்சம் காரராக பேசினான் சீலன்.
அவர் பேச்சுக்கு மறு வார்த்தை பேசாத அந்த அதிகாரி அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக தன் வேலையில் மூழ்கினார் .
“இந்த வங்கி ஊழியர்கள் இப்படித்தான் எதுவும் பொறுப்பா வேலை செய்றது இல்ல. இவங்களையெல்லாம் மேலிடத்தில புகார் செய்தாத்தான் சரியா இருக்கும் “என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்ட சீலன். அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அப்போது அவரைச் சுற்றி நான்கு ஐந்து குழந்தைகள் தன் குழந்தைகளின் கையில் செல்போன்களை வைத்துக் கொண்டு ஏதோ பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
.அந்த குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கு சென்று வீட்டிற்கு போய் திரும்பவில்லை என்பது அவர்கள் அணிந்திருந்த பள்ளிச் சீருடையே பறைசாற்றியது. ஏற்கனவே கோபத்திலிருந்து சீலனுக்கு அந்த குழந்தைகள் தன் கையில் செல்போனை வைத்துக்கொண்டு சத்தமாக பாடல், இசையை கேட்டுக் கொண்டிருப்பது எரிச்சலாக இருந்தது .
“கொஞ்ச நேரம் இதெல்லாம் நிப்பாட்டி வைக்கிறீங்களா நீங்க எல்லாம் ஸ்கூல் குழந்தைகள் தானே? யார் உங்க கையில் இந்த செல்போன்ல கொடுத்தது.இப்படி சத்தமா வச்சு மத்தவங்கள தொந்தரவு பண்ணக்கூடாது. தாய் தகப்பன் அவங்க சந்தோசமா இருக்கணும்ங்கறதுக்காக தன்னுடைய குழந்தைகள் கையில செல்போனை கொடுத்துடுறாங்க ஆனா அந்த குழந்தைங்க வேற வழி இல்லாம செல்போனை பார்த்து அதற்கு அடிமையாகி பெருசாகி வளர்ந்ததுக்கு அப்புறமும் அந்த செல்போனை விட்டு எந்திரிக்கிறது இல்லை .குழந்தைக்கு கட்டு போறதுக்கு முதல் காரணம் பெற்றோர்கள் தான்.சின்ன வயதிலேயே அந்த செல்போன்ல இருக்கும் நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் அறிந்து கொள்ளும் அந்த குழந்தைகள் நாளடைவில் அந்த செல்போனுக்கு அடிமையாகிறார்கள்.. செல்போன் இல்லை என்றால் வாழ முடியாது என்று நிலைக்கு தள்ளப்படும் அவர்கள் எப்போதும் செல்போனை பார்த்து இப்படி இருக்கிறார்கள் காரணம் அந்த குழந்தைகளின் தாய் தகப்பன் தான் அவர்களை அந்த நிலைமைக்கு ஆளாக்கி வைக்கிறார்கள் என்பதை உணர்ந்தான் சீலன்
செல்போனை வைத்து கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளையும் பெற்றோர்களையும் கவனித்தான் சீலன். செல்போனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் கவனம் வேறு எங்கும் செல்லவில்லை. செல்போனிலேயே மூழ்கிக் கிடந்தது. குழந்தைகளின் தாய்கள் வங்கி ஊழியர்களிடம் ஏதேதோ பேசி தங்களுக்கு தேவையானதை பெற்றுக் கொண்டிருந்தார்கள். இதை அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் கேட்கலாமா ? வேண்டாமா ? என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு குழந்தையிடம் ஒரு அம்மா வந்து
பாேவமா என்றதும் சரி என்று தலையாட்டி குழந்தை தன் தாயின் முகத்தைக் கூட பார்க்கவில்லை; மறுபடியும் அந்த தாய் வீட்டுக்கு போலாமா? என்று கேட்க மறுபடியும் தலையாட்டி அந்தக் குழந்தை செல்போனில் இருக்கும் கவனத்தில் எடுக்கவில்லை. அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த சீலன்
அந்த அம்மாவின் அருகே வந்தான். உங்களுடைய வேலை சரியா நடக்கணும். குழந்தைகள் நம்ம தொந்தரவு பண்ண கூடாதுன்னு தானகுழந்தைகள் கையில செல்போன் கையில் கொடுக்குறீங்க? இது எவ்வளவு பெரிய தப்பு .நீங்க சாதாரண கொடுக்குற இந்த செல்போன் தான் நாளைக்கு அவங்க பெரிய ஆளானதும் அதுக்கு அடிமையாக உருவாகுறாங்க. நீங்க வங்கிக்கு வந்து இங்க என்னன்னா நடக்குது என்ன செய்றோம். அப்படிங்கறத குழந்தைக்கு கற்றுக் கொடுத்தீங்கன்னா, நாளைக்கு அந்த குழந்தை பெரியவனாகி இந்த வங்கிக்கு வந்தா எல்லாத்தையும் ஈஸியா முடிச்சுட்டு போயிடுவாங்க. ஆனா நீங்க செல்போனை கைல கொடுத்து குழந்தைகள் அங்கேயே உட்கார வச்சிருங்க .அந்த குழந்தைகளுக்கு உலகம் தெரியல. மனுசனும் தெரியல. அதனாலதான் இப்ப இருக்குற எந்த இளைஞர்களும் வயதானவர்கள மதிக்கிறது இல்லை. காரணம் ஒரு தாய் தகப்பன் அந்த குழந்தைக்கு ஏதோ சொல்லிக் கொடுக்கிறாங்க. எப்படி வாழனும்னு சொல்றதில்ல.அதான் முக்கியம். ஆனா, நாம யாரும் அத செய்றது இல்ல” என்று சொல்ல இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மற்ற குழந்தைகளின் அம்மாக்கள் ஓடி வந்து குழந்தைகளின் கையில் இருக்கும் செல்போனை பறித்தார்கள் .
அம்மா செல்போன் செல்போன் என்று கதறியது குழந்தைகள்.இது எதையும் கவனிக்காத தாய்மார்கள் சீலனையும் குழந்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். தான் வந்த காரியம் வேறு ஆனால் விதைத்தது நல்ல விஷயம் . இனிமேலாவது இந்த பெற்றோர்கள் திருந்துவார்கள்” என்று எண்ணியபடியே அந்த வங்கியை விட்டு வெளியே வர முற்பட்டான்.
ஒரு குழந்தை செல்போன் செல்போன் என்று அழுது அடம் பிடித்தது. ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தையின் அழுகையும் இம்சையும் தாங்காத அந்த தாய் அந்த குழந்தையின் தன் கையில் இந்த செல்போனை குழந்தைகளிடம் கொடுத்தாள்.
அந்த செல்போனை வாங்கிய குழந்தை மறுபடியும் அதற்குள் மூழ்கியது. பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போச்சே ? என்று வருந்திய சீலன் வங்கியை விட்டு வெளியேறினான்.
#சிறுகதை
சுயநலத்திற்காக தான் பெற்றோர் என்பதை அழகாக தெரிய பண்படுத்தி கதாசிரியருக்கு ஒருசல்யூட். பாரதிராஜன்என்கிற ரங்கராஜன அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.
நன்றி சார் , தெளிவான விமர்சனம்