சென்னை, ஜுன். 21–
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது நேபாள சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருபவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இதற்கு அடுத்த குடியிருப்பில் துப்புரவு பணியாளராக நேபாளத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பணியாற்றி வந்தார். 5 வயது சிறுமி அடிக்கடி விளையாடுவதற்காக சிறுவன் வேலை செய்யும் குடியிருப்பு பகுதிக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல சிறுமி விளையாடி விட்டு அழுது கொண்டே வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் விசாரித்த போது 17வயது சிறுவன் அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17வயது நேபாள சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.