செய்திகள்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி 25 பேர் வன்கொடுமை

புதுவையில் தம்பதி உட்பட 22 பேர் கைது

புதுச்சேரி, செப். 17–

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த புதுவை தம்பதி உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி கோரிமேடு மோகன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், கடலூரை சேர்ந்த பாலாஜியும், அவரது மனைவி உமாவும் வீடு வாடகைக்கு எடுத்து 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியது கண்டுப்பிடிக்கப்பட்டது.

22 பேர் கைது

இதனை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பாலாஜியையும், அங்கிருந்த வாடிக்கையாளரான புதுவையை சேர்ந்த பச்சையப்பன் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து பாலாஜியிடம் நடத்திய விசாரணையில், அவரும் அவரது மனைவியும், சிறுமியை 20 வயது கல்லூரி மாணவி என கூறி, பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதியதும், இதுவரை 25 பேர் அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தம்பதியினர் உட்பட 27 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் , 22 பேரை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள உமா உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.