செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

Makkal Kural Official

சென்னை, ஜன. 10:

பெருங்குடி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2024ம் ஆண்டு, பெருங்குடி பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, 44 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம், போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 44 வயது நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த தரமணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *