ஆவாரம் பூ என்பது தங்கச்சத்துள்ளது என்பதால் தங்கத்திற்கு சமமாக கருதப்பட்டு பூ. சாதாரணமாக தங்க பஸ்பத்தின் விலையும் அதிகம். தங்கத்தின் விலையும் அதிகம். உடலில் ஏற்படும் சிறுநீர் பாதைகளில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கக்கூடியது இந்த பூக்கள்.
அன்றாடம் இந்த ஆவாரம் பூக்களை உட்கொள்வதால் மேனியே தங்க நிறத்திற்கு மாறும் என்றால் அதனை மறுக்க முடியாது.
சிறுநீரக தொற்று, பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தோற்று நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ சாறினை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பல நோய்களுக்கு சிறந்த தீர்வை இந்த ஆவாரம் பூக்கள் அளிக்கிறது.
மேகவேட்கை, தேகசூடு, உடல் நாற்றம், உடலில் உப்பு பூத்தல், வறட்சி, ஆயாசம், மலச்சிக்கல், மூலம், கண் எரிச்சல் என பலவற்றை நீக்கும். உடலுக்கு பலத்தை தரும். மூலத்திற்கு எவ்வாறு ஆவாரம்பூவை பயன்படுத்துவது என தெரிந்துக்கொள்ள ஆவாரம்பூ பக்கத்திற்கு இணையவும்.
ஆவாரம் பூ குடிநீரை தவறாமல் குடித்து வந்தால்
உடல் குளுமை அடையும். உஷ்ணம் நீங்கும்.