வாழ்வியல்

சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கும் பப்பாளி

பப்பாளி பழம் உடலுக்கு நலம் தரும்.

அதன் நன்மைகள் வருமாறு: –

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே நச்சுக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது. பப்பாளி பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் வயிறு ,வாய்ப் புண்ணை குணப்படுத்தும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது.

வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால் கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் கூடுதலாக உள்ளது.

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும் சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும் ஆண்மை தன்மை பலப்படவும் ரத்த விருத்தி உண்டாகவும் ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள். இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும். பப்பாளி குறைவான கலோரிகளும் வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால் இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம்.

Leave a Reply

Your email address will not be published.