வாழ்வியல்

சிறுநீர்த் தாரை எரிச்சலைக் குணமாக்கும் செம்பருத்தி இலைகள் மருத்துவம்

சிறுநீர்த் தாரை எரிச்சல் குணமாக 4 செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். அல்லது 4 செம்பருத்தி பூ மொட்டுகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி மேலே குறிப்பிட்ட முறையில் குடிக்க வேண்டும்.

மாதவிடாய் சரியாக வருவதற்கு நான்கு புதிய செம்பருத்தி பூக்களை அரைத்து பசையாக செய்து கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இந்தப் பசையை உட்கொள்ள வேண்டும். 7 நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும். செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும் மாலையிலும் 7 நாள்கள் வரை உட்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *