நல்வாழ்வுச் சிந்தனைகள்
உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
ஹைபர்கேமியா ( அதிகரித்த பொட்டாசிய அளவு ) ,
இரத்த சோகை , சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் குறிப்புக்கள்பற்றித் தெரிந்து கொள்த் தொடர்ந்து படியுங்கள்.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக மேம்படுத்த உதவும் சில குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
அதிகம் கொழுப்பு உள்ள உணவுகள் மற்றும் கொழுப்பை உண்டாக்கும் உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். அதிக கொழுப்பு கூட சிறுநீரகத்தை அதிக வேலை வாங்கி, சேதப்படுத்தும்.
இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். அதிகரித்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் சிறுநீரக செயல்பாட்டை மோசமாக்கி அதன் செயல்திறனைக் குறைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் சாப்பிடும் உணவில் குறைந்த அளவு மட்டுமே உப்பு சேர்த்து எடுத்துக் கொள்வது நல்லது. இரத்தத்தில் அதிக அளவு சோடியம் இருக்கும்போது, அதனை சுத்தப்படுத்தும் வேலை சிறுநீரகதத்துக்கு அதிகமாக இருக்கும். அதனால் அதிக நேரம் சிறுநீரகங்கள் வேலை செய்யும். அதேபோல் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களின் உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக் கொண்டால் அது உயர் இரத்த அழுத்த அளவை அதிகரிக்கும். இதனைத் தவிர்க்க குறைந்த அளவு உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.
பழங்கள் , காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளவும். அவற்றில் உள்ள தாதுக்கள் சிறுநீரக நோய்களில் இருந்து உங்களைக் காக்கவும் சிறுநீரக சேதத்தில் இருந்து சிறுநீரகங்களை காக்கவும் செய்யும். சமச்சீர் உணவுமுறையை பின்பற்றுவதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியம் மட்டுமின்றி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதன் காரணமாகவும் கூட சிறுநீரக நோய்கள் உண்டாகும். புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவதால் சிறுநீரக செயல்பாட்டில் அதிக அழுத்தம், அதிக செயல்பாடு ஏற்படும். இதன் காரணமாகவும் சிறுநீரக நோய்கள் உண்டாகும்.
சிறுநீரக நோயின் அறிகுறிகளில் 5-க்கும் மேற்பட்ட அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக நோயைக் கண்டறிய பின்பற்றப்படும் சில முக்கியமான நடைமுறை சோதனைகள் என்ன என்று பார்ப்போம் வாங்க.
சிறுநீரகத்தின் குளோமருலர் வடிகட்டுதல் வீதம் அல்லது ஜிஎஃப்ஆர் எனப்படும் சோதனை செய்வதன் மூலம் சிறுநீரகத்தின் வடிகட்டுதல் வீதம் மற்றும் அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதையில் பாக்டீரியா தொற்று, வைரஸ் தொற்று, இரத்தப்போக்கு இருந்தால், நுண்ணோக்கி கொண்டு சிறுநீரை பகுப்பாய்வு செய்யலாம். இதன் மூலம் எந்த வகையான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் :
இந்த சோதனைகளின் மூலம் சிறுநீரகங்களின் தெளிவான வரைபடத்தை பார்க்க முடியும். இந்த சோதனைகளின் மூலம் சிறுநீரகங்களில் அடைப்பு, சிறுநீர் பாதையில் அடைப்பு, சிறுநீரகக் கற்கள் மற்றும் நீர்க்கட்டிகள் இருந்தால் அதனைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையைப் பெற முடியும்.
சிறுநீரக நோயின் அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், பயாப்ஸி செய்து பார்க்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துவார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மயக்க மருந்து பயன்படுத்தி சிறுநீரகத்திலிருந்து சிறிய துண்டு தசை திசு எடுக்கப்படும். இதனை ஆய்வு செய்து பார்ப்பதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து சிறுநீரக புற்றுநோய் வரை கண்டறிய முடியும்.
இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவை சரிபார்ப்பதன் மூலமும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளலாம். கிரியேட்டின் என்பது தசைகளில் இருக்கும் மூலக்கூறுகளின் கழிவுப் பொருளாகும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகமாக இருப்பது சிறுநீரகத்துக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
சிறுநீரகம் தான் உடலின் கழிவுகளை போக்க உதவும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். அதனை சரியாக பராமரிப்பதன் மூலம் சிறுநீரக நோய்களை தடுக்கவும், சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் முடியும்.
சிறுநீரக நோயின் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நிலைமை மோசமடைவதை தடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.