வாழ்வியல்

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் வாழ சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?


நல்வாழ்வு


சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் வாழ சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? என்று அறிய தொடர்ந்து படியுங்கள்.

‘ரத்தத்தில் அதிக அளவு கால்சியம் சேர்ந்தால், ‘ஹைபர்கால்சிமியா’ (HYPERCALCEMIA) எனும் நோய் வரும். இந்த நோய் சிறுநீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதற்கு காரணமாகிவிடுகிறது. உணவின் மூலம் கால்சியம் அதிக அளவு சேர்வதால், சிறுநீரகக் கற்கள் உருவாவது இல்லை. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, புரதம், சர்க்கரை, பாஸ்பரஸ், மக்னீஷியம், மற்றும் மன அழுத்தம், வைட்டமின் – டி குறைபாடு, உடற்பயிற்சி இன்மை இதெல்லாம் தான் கால்சியம் சிறுநீரகத்தின் வழியே வெளியேறுவதில் தடை ஏற்படுத்துகின்றன.

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் தான் எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க முடியும்.’

‘பால் பொருட்கள், கீரை, வெண்டக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, வெற்றிலை, மீன், கடல் உணவுகள், பாதாம், சூரிய காந்தி, எள் விதைகள், ராகி, கம்பு, சோளம், சிறு தானியம், பட்டாணி, சோயாபீன்ஸ், சுண்டல் ஆகிய உணவுப் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. இவற்றில் சிலவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெறலாம்.’


Leave a Reply

Your email address will not be published.