வாழ்வியல்

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும் உருளைக் கிழங்கு

மக்கள் விரும்பிச் சாப்பிடும் கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக் கிழங்கு.

இதில் புரதம், இரும்புச் சத்து மற்றும் சிறிதளவு வைட்டமின் சத்துக்களும் உள்ளன. உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள் ஏற்படும் என்பார்கள். இது உண்மை தான்.

எனவே உருளைக் கிழங்கின் மேல் தோலை நீக்காமல் சமைத்துச் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை ஏற்படாது.

உருளைக் கிழங்கில் அரிசியில் இருப்பது போன்றே மாவுப் பொருள் இருப்பதால், எஸ்கிமோ என்ற இன மக்கள் இதை முழு உணவாகவே சாப்பிடுகின்றனர்.

உருளைக் கிழங்கு உடலுக்கு வலிமை தருகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு நன்றாக வேக வைத்த உருளைக் கிழங்கைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

தோலை நீக்காமல் உருளைக் கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் சக்தி உருளைக் கிழங்குக்கு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *