கோபம் – ஜெ. மகேந்திரன்
அப்பா ‘டேய் முகிலா’ படுக்கையிலிருந்து எழுந்து போய்க் குளிடா, குளித்து முடித்துப் படிடா. சரியான நேரத்துக்கு பள்ளிக்கு போடா.’’
என்னப்பா, இப்படி சொல்கிறாய். இருப்பா இன்னும் கால் நிமிடம், போகட்டும், டேய் முதலில் எழுந்திரு. என கடிந்து கொண்டார்.
அவ எங்க மாலதி, என்னப்பா, இதுத்தான் குளித்த லட்சணமா? ஷாம்பே போகவில்லை; முடியில் ஷாம்பு. மறுபடியும் போய்க் குளி . இந்த அப்பாவுக்கு இதே வேலை. நீங்கள் அமைதியாக இருந்தால் நான் சரியாக குளிப்பேன் என பாத்ரூமுக்கு சென்று விட்டாள்.
டேய் முகில், போய் டூத் பேஸ்டு போட்டு பல்ல மெதுவாக தேய்த்து பல்ல மேலும் கீழுமாக தேய்த்து பல்லத் துலக்கு. சோப்பை நன்றாக போட்டு குளி.
மாதவன் அப்பா ஒரு அரசாங்க எழுத்தர். நான் ஆபீஸ் போக வேண்டும். என் மனைவி இருந்திருந்தா அவ எனக்கு ஒத்தாசையா இருந்திருப்பா. காலாகாலத்துல போய்ச் சேர்ந்திட்டா!!! மாதவன் சட்டை, பேண்டை போட்டு காலையில எழுந்து சாப்பாட்டை ஒரே வேலையாக செய்து குழந்தைகளுக்கும் ரெடி பண்ணிட்டார்.
முகிலா, மாலதி கிளம்பிட்டீங்களா? முகிலன் சட்டையைப் போட்டான். என்னடா, பேண்ட் துவைக்கக் கூடாதா? சரி மாலை மாலதியிடம் கொடு துவைப்பா. மாலதி ரெடியா, மணி ஆயிக் கொண்டிருக்கிறது.
பள்ளி வாசலில் பைக்கை நிறுத்தி மாலதியையும் முகிலையும் இறக்கிவிட்டு ,
ஆசிரியரிடம் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள், நன்றாக படிக்கட்டும்.
சார் பிள்ளைகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறோம். அனுப்பி வையுங்கள்.
மாதவன்,‘‘ எங்கங்க ‘நான், வாங்குற சம்பளத்தில் நாங்க 3 பேரும் பொழுதைக் கழிக்க வேண்டும் என்றார்.
‘இல்லை சார் அனுபமா டீச்சர் ‘நீங்கள் சொல்வது புரிகிறது. ‘பள்ளிக்கு சுற்றுலா என்ற பெயரில் பிள்ளைகளுக்கு அறிவுள்ள விஷயங்கள் தெரிய வரும்; சுற்றுலா பயன்படும் அதற்காகத்தான்’’ என்றாள்.
. மாதவன் சுற்றுலாவுக்கு சென்றுதான் அறிவை வளர்க்க வேண்டியதில்லை என்றார்.
இல்ல சார் பிள்ளைகள் அனைவரும் செல்ல வேண்டும் என எச்.எம். கூறிவிட்டார்.
சரி ஏதோ, பண்ணுங்கள், கிளம்பி விட்டார் பைக்குடன் மாதவன்.
மறுநாள் ‘அப்பா எங்கள் பள்ளியில் திருக்குறள் போட்டி , ‘பேச்சுப் போட்டிப்பா; கலந்திருக்கிறேன் என மாலதி கூறினாள்.
‘சரிம்மா’ நான் சில பாய்ண்டுகள் கூறுகிறேன்’’.
கூறிவிட்டு போய் எழுதிப்படிப்படி.
சரிப்பா. போட்டிக்கான வரிகளையும் படித்து ஆயத்தமானாள் மாலதி.
‘அப்பா, நீ என்னய்யா’
நானும் கட்டுரைப் போட்டி கலந்திருக்கிறேன். என்னப்பா ஆசை இருக்கிறது உனக்கு. ஆனால் உனக்கு கையெழுத்து குளறுபடி அழகாக இருக்காதே. நான் டேய் 2 வரி நான்கு வரி புத்தகங்கள் பழகு என சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இப்ப பார் போட்டி சரி நான் எழுதித் தருவதைப் படித்துப் பயிற்சி செய்து அப்படியே எழுதி. இருவரும் போட்டிக்குத் தயாராகுங்கள் என்றார்.
மாதவனின் பேச்சை கேட்காமல் மாலதி பேச்சுப் போட்டியில் பேசி ஆறுதல் பரிசைத்தான் பெற முடிந்தது. முகிலன் அப்பா பேச்சை கேட்டு பயிற்சி செய்து இடை விடாது எழுதினான்.
ஆச்சர்யம் முதல் பரிசைத் தட்டிச் சென்று விட்டான். அப்பாவிடம் மாலதி அப்பா உங்கள் பேச்சை கேட்காமல் உங்கள் பாயிண்டுகள் சரியாக திறம்படப் பயன்படுத்தவில்லை.
அதனால் தான் எனக்கு ஆறுதல் பரிசு!!! அப்பா, பேச்சை பொருட்படுத்தாமல் அப்பா கோபப்படுகிறார் என நினைத்தது இப்படியாகிவிட்டது. அப்பா கோபப்பட்டாலும் அப்பாவை மதித்து அவர் பேச்சை கேட்டு குறுகிய காலத்தில் இடை விடாது பயிற்சி எடுத்து முகில் முதல் பரிசை பெற்று விட்டான். இனி அப்பா பேச்சை கேட்போம் என முகிலும் மாலதியும் அப்பாவிடம் அப்பா உங்கள் பேச்சை கேட்போம்’’ என்றார்கள்.
சரிப்பா சரிம்மா நானும் இனி அதிகமாக கோபப்பட மாட்டேன். கோவம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும் என்றார் அப்பா.
அவரை அன்புடன் கட்டிப்பித்தார்கள் பிள்ளைகள்.
அவர்களை அப்படியே அணைத்துக்கொண்டார் அப்பா.
கோபம் குறைந்தும் குதூகலம் நிறைந்தது.