நுங்கம்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வரும் கதிரேசனுக்கு அங்கிருந்த ஹேட்டன்ஸ் சாலையின் பெயர் ஆச்சரியத்தைத் தந்தது. 1708 ஆம் ஆண்டில் நுங்கம்பாக்கம் நெல் வயல்கள் நிறைந்த ஒரு கிராமமாக இருந்தது. 1795 ல் மவுண்ட் சாலை, தற்போதைய அண்ணா சாலையில் பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்குவதற்காக நிலங்களை ஒதுக்கீடு செய்தனர். இதன் விளைவாக நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதானக் குடியிருப்பு உருவானது. இந்தப் பகுதி பிரதானக் குடியிருப்புப் பகுதியானது. இருபதாம் நூற்றாண்டில் குறிப்பாக தி. நகர் போன்ற திட்டமிடப்பட்ட குடியிருப்புகள் உருவாக்கப்பட்ட போது ,நுங்கம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சென்னையின் முக்கிய மற்றும் மதிப்பு மிக்க மையப் பகுதியாக வளரத் தொடங்கின.
இதனால், ஹேட்டன்ஸ் சாலை, இந்தச் சாலை நுங்கம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் முக்கியமான, கலாச்சாரச் சாலையாகத் திகழ்கிறது. இங்கு வள்ளுவர் கோட்டம் அதைச் சார்ந்த முக்கிய வழிபாட்டுத் தலங்கள் இந்தச் சாலையின் மிக அருகில் உள்ளன. இந்தச் சாலை பல நூற்றாண்டுகளாக, இந்தப் பகுதியில் இருக்கிறது. ஆன்மீகம் மற்றும் கலாச்சார நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறது, இந்தச் சாலை. 1909 ஆம் ஆண்டு சென்னை நகர வரைபடத்திலேயே இந்தச் சாலை இடம் பெற்றுள்ளது.”
என்று யோசித்தபடியே இருந்தான், கதிரேசன்.
‘இந்தச் சாலையைச் சுற்றியுள்ள பகுதியில் கட்டப்பட்ட உயரமான கூரைகளைக் கொண்ட வீடுகள் இந்தச் சாலையின் வரலாற்றைக் கூறுகிறது. இந்தச் சாலையில் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி போன்ற பிரபலமான மற்றும் பழமையான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. ஹேட்டன்ஸ் சாலை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை அதைச் சுற்றியுள்ள முக்கியச் சாலையை இணைக்கும் ஒரு குறுக்குச் சாலையாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இது ஒதுக்குப்புறமான குறைந்த மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்திருக்கலாம் ஆனால் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நுங்கம்பாக்கம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இந்தச் சாலையில் மக்கள் நெருக்கம் அதிகமானது. இதனால் இந்தப் பகுதியில் முக்கியமான குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்தப் பகுதியில் வளரத் தொடங்கின. சென்னையின் வரலாற்றை ஆவணப்படுத்திய பல முக்கிய வரலாற்று ஆசிரியர்களில் முத்தையா அவர்களும் ஒருவர். இவர் இந்தப் பகுதியைப் பற்றித் தன் ஆய்வில் விரிவாகக் கூறியுள்ளார்.
பெரும்பாலும் இந்தச் சாலையில் இருக்கும் வீடுகள் முக்கிய அரசாங்கக் கட்டிடங்கள் அந்தக் கால வரலாற்றைச் சொல்கிறது’ ஹேட்டன்ஸ் சாலையைப் பற்றி அவன் படித்தது ஞாபகத்திற்கு வந்தது . 1870களில் சென்னை மாநிலத்தின் கவர்னாக இருந்த
சர் ஜான் ஹேட்டன் அவர்களுடைய பெயரால் தான் இந்தச் சாலை அழைக்கப்படுகிறது. இந்தச் சாலை சென்னையின் வளர்ச்சி மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கிறது.சர் ஜான் ஹேட்டன் மெட்ராஸ் மாகாணத்தில் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றியவர். பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலேய அதிகாரிகளின் குடியிருப்புகளையும் கல்வி நிறுவனங்களையும் கொண்டிருந்தது இந்தச் சாலை.
ஆங்கிலேயர்களின் நிர்வாக வரலாறு, ராணுவம் மற்றும் சமூக பின்னணியைக் கொண்ட இந்தச் சாலைகள் அந்தக் காலத்தில் சென்னை நகரமயமாக்கல் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது’ என்பது கதிரேசன் நினைவில் வந்தது.
‘ இந்தச் சாலை தற்போது சென்னையின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதன் வரலாறு ஆங்கிலேயர்களின் ஆட்சி முறையைப் பற்றிச் சொல்கிறது.இந்தச் சாலையில் மிக முக்கியமான வரலாற்று அம்சமாக விக்டோரியா நகரம் 1903–ம் ஆண்டு, பொறிக்கப்பட்ட ஒரு எல்லைக் கல் இன்றும் ஹேட்டன்ஸ் சாலையின் வலது புறத்திலிருந்து 400 மீட்டர் தொலையில் அது வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கிறது.
மெட்ராஸ் நகரின் எல்லைகளைக் குறிக்க நடப்பட்ட ஏழு எல்லைச் கற்களில் இதுவும் ஒன்றாகும். இந்த எல்லைக் கல்லானது ஹேட்டன் சாலையில் வடக்கு முனையில் நோக்கி நடப்பட்ட இந்தக் கல்லானது அதன் உண்மையான இடத்தில் சேதம் அடையாமல் அப்படியே இருக்கிறது. இந்தக் கல் இந்தச் சாலையின் வரலாற்று முக்கியத்துவத்தைச் சொல்கிறது. இந்தப் பகுதியில் போர்த்துக்கீசியர்கள் வாழ்ந்து வந்ததால், அவர்கள் இங்கு ஒரு கோட்டையைக் கட்டினார்கள்.
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் இந்தியாவிற்கு வந்து இங்கு போதித்ததாகவும் அவரின் உடல் சாந்தோம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மீது தான் புகழ்பெற்ற சாந்தோம் பசிலிக்கா தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.
சாந்தோம் பகுதியானது பதினோறாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களின் கட்டுப்பாட்டிலும் பின்னர் டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது .இந்தப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான கட்டிடங்கள் இருக்கின்றன. இந்தச் சாலையில் விக்டோரியா நகர எல்லைக்கல் , வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, பத்ம சேஷாத்ரி பாலபவன் ( PSBB) பள்ளி , ஸ்டெர்லிங் சாலை, அடையாறு ஆறு பகுதி ‘ என்று ஹேட்டன்ஸ் சாலையில் இருக்கும் இடங்களின் வரலாறு முழுவதும் கதிரேசன் மனதில் நிறைந்து கிடந்தது. இந்தச் சாலை வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலைக்கும், ஸ்டெர்லிங் சாலைக்கும் இடையே தொடங்கும் முக்கிய இணைப்புச் சாலையாக இருக்கிறது’ என்று முழுவதும் அவன் மனதில் விரிய, அவன் குடியிருக்கும் வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான், ஹேட்டன்ஸ் சாலை என்ற பெயர்ப் பலகை பிரிட்டிஷ் கால வரலாற்றைச் சுமந்து நின்றது.
![]()





