‘லட்சுமணசாமி சாலை. கே.கே நகரில் உள்ள ஒரு முக்கியமான சாலை. கலைஞர் கருணாநிதி நகர் எப்படி வந்திருக்கும்? எதற்காக இந்தப் பகுதியின் ஒரு சாலைக்கு லட்சுமணசாமி சாலை என்று பெயர் வைத்தார்கள்? ‘என்று யோசனை செய்தான், அருள்.
‘1970, 1980–ம் ஆண்டு முற்பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முயற்சியால் திட்டமிட்ட பகுதியாக உருவாக்கப்பட்டது கலைஞர் கருணாநிதி நகர். இந்தப் பகுதிக்கு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி நினைவாக பெயரிடப்பட்டது. 1971 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி அவரது 48–வது பிறந்த நாளை ஒட்டி கோடம்பாக்கம் – புதூர் வீட்டு வசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் என்று பெயரிடப்பட்டது.
கே.கே நகர் ஒரு செவ்வக வடிவத்தை கொண்டுள்ளது. இது செக்ட்டார்களாகத் தெருக்களாக ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 15 துறைகள் மற்றும் 102 தெருக்கள் உள்ளன ஒவ்வொரு துறையின் மையத்திலும் பூங்காக்கள் இருக்கின்றன. அகலமான சாலைகள். பசுமையான பகுதிகள் மற்றும் திட்டமிடப்பட்ட உட்கட்டமைப்போடு இருக்கிறது.
லட்சுமணசாமி சாலை கேகே நகரில் உள்ள முக்கியமான சாலை. இது ராஜமன்னார் சாலை மற்றும் ராமசாமி சாலையுடன் சேர்ந்து கேகே நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதிகளுக்கு முக்கியமான இணைப்பு சாலையாக இருக்கிறது. தி.நகரில் உள்ள ஒவ்வொரு முக்கியச் சாலையும் நீதிக்கட்சியில் உள்ளவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.
கே.கே நகரில் உள்ள சாலைகளின் பெயர்கள் திராவிடக் கழகம், கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்கள் பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் என்று அழைக்கப்படும் லட்சுமண சாமி அவர்களின் நினைவாக இந்தச் சாலைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது’என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டான்.
லட்சுமணசாமியின் வரலாறு அவனுக்குள் வந்து போனது.’லட்சுமணசாமி அக்டோபர் 14, 1887 அன்று பிறந்தார். இவரும் இவரது சகோதரர் ஆற்காடு ராமசாமி முதலியாரும் இரட்டைச் சகோதரர்கள். லட்சுமணசாமி ஒரு திறமையான மகப்பேறு மருத்துவர் மற்றும் மகளிர் நல மருத்துவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் இந்திய முதல்வராக பணிபுரிந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 27 ஆண்டுகள் 1936 முதல் 1963 வரை நீண்ட காலம் பணியாற்றியவர்.
இவர் உலக சுகாதார அமைப்பின் டபிள்யூ நிர்வாகக் குழுவின் தலைவராக 1949 முதல் 1950 வரை யுனெஸ்காவின் துணைத் தலைவராக பணியாற்றியவர். 1952– 1953 ஆம் ஆண்டு இந்திய அரசின் இடை நிலைக் கல்வி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த ஆணையம் ‘முதலியார் கமிஷன்’ என்று அறியப்பட்டது. இவரது பணிக்காக இந்திய அரசு 1963 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கியது ‘என்று அத்தனை வரலாறுகளும் அருளுக்குள் வந்து போனது.
‘1970களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தற்போதைய கே.கே நகர் அதைச் சுற்றி உள்ள அசோக் நகர் பகுதிகள் பெரும்பாலும் விவசாய நிலங்களாகவும் புதூர் மற்றும் நெசப்பாக்கம் கிராமங்கள் சதுப்பு நிலங்களாகவும் இருந்தன. இந்தப் பகுதியில் கூவம் ஆற்றின் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு குளங்களும் கால்வாய்களும் இருந்ததாக ஆதாரங்கள் உள்ளன.லட்சுமண சாமி அவரது அண்ணன் ராமசாமி இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் உள்ள இரட்டை சகோதரர்கள்.
இவர்களை எளிதில் அடையாளம் காண முடியாது. அண்ணன் ராமசாமி சட்டம், அரசியல், ராஜதந்திரம் மற்றும் நிர்வாகத் துறைகளில் சிறந்து விளங்கினார். தம்பி லட்சுமண சாமி மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் ஜாம்பாவான இருந்தார் .இருவரும் தங்களது துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் சர் என்ற பட்டத்தை வழங்கியது. இவருக்கும் இந்தியாவில் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.
இருவரும் ஆக்ஸ் பாேர்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டங்கள் பெற்றனர். இருவரும் மெட்ராஸ் சட்டமன்றக் குழுவில் உறுப்பினர்களாகப் பணியாற்றினர். இருவரும் மிகச் சிறந்த ஆங்கிலப் பேச்சாளர்கள். லட்சுமணசாமி புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவராக இருந்து எக்மோர் மருத்துவமனையை இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக மாற்றினார்.
இவர் clinical obstetrics (மகப்பேறு மருத்துவ நூல்) என்ற நூல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் புத்தகம் பல தலைமுறை மருத்துவ மாணவர்களுக்கு அடிப்படையான பாடமாக இருக்கிறது. இவர் ராயல் ஆப் காலேஜ் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தின் உறுப்பினர். அமெரிக்கன் காலேஜ் ஆப் சர்ஜன்ஸின் உறுப்பினராகவும் இருந்தார்.
சென்னை ஐஐடியின் முதல் ஆளுநர் குழுவில் தலைவராக 1959 முதல் 1969 வரை இருந்தார். .இவரது தலைமையிலான குழுவில் பரிந்துரையின் பேரில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ அறிவியல் முதுகலைப் படிப்புகள் ( M.SC medical) அறிமுகப்படுத்தப்பட்டன. இது அகில இந்திய மருத்துவ அறிஞர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தது.
இவர் துணைவேந்தராக இருந்த காலங்களில் அறிக்கை வாசிப்பதை விட்டு சாதாரணமா பேசத் தொடங்கினார். எவ்வளவு சத்தம் இருந்தாலும் மக்கள் சந்தோசமாகக் கேட்பார்கள் ‘1970 களின் நடுப்பகுதியில் இந்த பகுதி மிகவும் அமைதியான சமமான நிலப்பரப்பாக இருந்தது. அப்போது மரங்கள் மிக அரிதாக காணப்பட்டன. பலவிதமான தாவரங்கள் வளர்ந்திருந்தன.
பட்டாம்பூச்சிகள் மற்றும் சில நேரங்களில் விலங்குகள் நடமாட்டம் இருந்ததாகக் கூறுகிறார்கள் அருகில் உள்ள கோடம்பாக்கம் திரைப்பட நகரமாக அறியப்படும் இடமாக இருந்தது. இங்குள்ள திறந்த வெளிகள் மற்றும் அமைதியான சூழல் காரணமாக திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. கே.கே .நகர் அசோக் நகர் உடன் 1960 –1970களில் முற்பகுதியில் முன் மாதிரிக் குடியிருப்பாகத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்தப் பகுதியை ஒரு கிரெட் அயன் அமைப்பில் கட்டியது.
அகலமான சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் இருக்கின்றன .இந்தப் பகுதி ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை .உயர் வருவாய் உள்ளவர்கள் .நடுத்தர குடும்பம் மற்றும் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்காக அமைக்கப்பட்டது. இவர்களது குடும்பம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ‘கென்சிங்டன ‘ என்ற பெரிய வீட்டில் வசித்தார்கள். இவ்வளவு பெருமையுள்ள லட்சுமணசாமி ஏப்ரல் 15, 1974ல் காலமானார்’ என்று அருளுக்குள் லட்சுமணசாமியின் வரலாறு இன்னும் நீண்டது.’
இங்கிருக்கும் பி.வி.ராஜ மன்னார் சாலை, ராமசாமி சாலை, காமராஜர் சாலை போன்ற தமிழ்நாட்டில் முக்கிய குடிமக்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.இந்தப் பகுதியில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பிஎஸ்பிபி போன்ற கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. 1964 அசோக் நகர் நிறுவப்பட்ட போது மௌரிய பேரரசர் அசோகரின் நினைவாக நான்கு சிங்கக் தலைகள் கொண்ட அசோகச் சக்கரங்கள் பொறிக்கப்பட்டது.
1980ல் முற்பகுதியில் உதயம் திரையரங்கம் உருவானது. அது இப்போது இடிக்கப்பட்டது. 1990களில் கே.கே. நகர் அமைதியான நெரிசல் குறைவான பகுதியாக இருந்தது.ஆரம்பத்தில் லட்சமணசாமி சாலை ஒரு குறுகலான பகுதியாக இருந்தது.ராஜமன்னார் சாலை மற்றும் ராமசாமி சாலை இணைந்து லட்சுமணசாமி சாலையில், இப்போது முக்கியப் பகுதியாக முக்கியமான போக்குவரத்து அடையாளமாக மாறிவிட்டது.
இந்தச் சாலை அண்ணா மெயின் ரோட்டில் உள்ள BSNL சந்திப்பிலிருந்து, ஐயப்பன் கோயில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் தொடங்குகிறது. பி.டி. ராஜன் சாலையில் சந்திக்கிறது. பி.வி. ராஜமன்னார் சாலையில் முடிகிறது என்று, லட்சுமணசாமி சாலையின் மொத்தப் பிரமிப்பையும் அறிந்து கொண்ட அருள், இரட்டைச் சகாேதரர்களானராமசாமி சாலைக்கும் செல்ல வேண்டும் என்று லட்சுமணசாமி சாலையில் நடந்து கொண்டிருந்தான்.
![]()





