நடிகர் சந்திரபாபுவின் கல்லறை அமைந்துள்ள குயிப்பிள் தீவுப் பகுதிக்கு வந்த மலரவனுக்கு அந்தக் கல்லறை பற்றிய ஆச்சரியம் மேலோங்கி இருந்தது. பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு முன்பு குயிப்பிள் தீவு அடையாறு நதி மற்றும் அதன் கிளை நதிகளால் சூழப்பட்ட பகுதியாக இருந்தது, கடல் அலைகளால் பாதிக்கப்பட்ட ஒரு கரையோர பகுதியாகவும் சதுப்பு நிலக் கால்வாய்களின் இடமாகவும் இருந்தது. இது இயற்கையாகவே ஒரு தீவாக இல்லை என்றாலும் நீரோட்டம் மிகுந்த ஒரு நிலப்பரப்பு.
இந்தப் பகுதியின் மிக முக்கியமான வரலாற்று அடையாளம் இங்கு ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட ஐரோப்பியக் கல்லறை. 1864–ம் ஆண்டின் மெட்ராஸ் பிரசிடென்சி நிர்வாக அறிக்கையின் படி மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் வசித்த கிறிஸ்துவர்களுக்காக ஒரு புதிய பொருத்தமான கல்லறை அமைக்க பிரிட்டிஷ் அரசு அடையாறு முகத்துவாரத்தில் நிலத்தை வாங்கியது.
இதற்கு முன்பு சாந்தோம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்துடன் இணைந்திருந்த கல்லறையை மூடினார்கள். இந்தக் கல்லறையானது ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்திற்காக பயன்படுத்தப்பட்டது. நடிகர் சந்திரபாபுவின் கல்லறை இங்குதான் அமைந்துள்ளது. இது இந்தப்பகுதி நவீன கலாச்சார வரலாற்றை சினிமாவுடன் இணைக்கிறது. அவரது மரணத்தின் போது பல திரைப்பட பிரபலங்கள் அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்த வந்ததால் அந்தப் பகுதி பரபரப்பானது ‘
அந்தக் கல்லறையைப் பார்த்துவிட்டு மந்தைவெளிப்பகுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தான், மலரவன்
‘மந்தைவெளிப் பகுதி ஆரம்ப காலத்தில் உயர் வகுப்பினர் வாழும் இடமாக இருந்தது. அதன் பிறகு மங்களூரியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் குடி ஏறினார்கள். மந்தைவெளிப் பகுதியில் பல கல்லூரிகள் உருவானதால் அது கல்வி நிறுவனமாக மாறியது. கபாலி திரையரங்கம் சுமார் 150 ஆண்டுகள் பழமையான திரையரங்கம் இடிக்கப்பட்டு, நவீன அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறியது ‘என்பதை நினைத்துக் கொண்டே மந்தவெளியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான் மலரவன்.
மந்தை என்றால் கால்நடைகளின் கூட்டம். வெளி என்றால் திறந்த வெளி, புல்வெளி என்று தமிழில் பெயர் உண்டு. முற்காலத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்காக இந்தப் பகுதி இருந்திருக்கலாம். 1950 களின் முன்னால் அடையாறு முகத்துவாரத்தில் இந்தப் பகுதி மயிலாப்பூரில் புறநகர் பகுதியாக இருந்தது’ என்பதை நினைத்துக்கொண்டே அந்தப் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தான்.
‘1953–ம் ஆண்டு சென்னை நகர மேம்பாட்டு அறக்கட்டளை சிட்டி இம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்ட் (சிஐடி) இங்கு குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டத்தை லோ இன்கம் குரூப் ஹவுஸிங் ஸ்கீம் தொடங்கியது. 1955 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கே.காமராஜ் அவர்களால் இத்திட்டத்தின் அடையாளமாக ஒரு தூணை திறந்து வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் உருவான கலை அலங்கார பங்களாக்கள் அந்தப் பகுதியின் அடையாளமாக விளங்கியது. மந்தவெளி அடையாறு நதி கடலுடன் கலக்கும் ஒரு பகுதியாக அமைந்தது .இந்த நதி அதைச் சுற்றியுள்ள சதுப்பு நிலக்காடுகள் காரணமாக ஒரு தனித்தன்மையோடு இருந்தது. இது வங்காள விரிகுடா கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால் உப்புத் தன்மை மிகுதியாக இருந்தது.
வரலாற்று ரீதியாக மந்தைவெளி என்பது பல்லவர் காலத்திலிருந்து சிறப்பு பெற்றிருந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோயில். மயிலாப்பூரில் ஒரு பகுதியாக இருக்கிறது. கபாலீஸ்வரர் கோயில் மற்றும் பிற பழமையான கோயில்கள் மந்தைவெளிக்கு அருகில் இருப்பதால் இந்தப் பகுதிக்கு ஒரு ஆன்மீக தொடர்பு இருக்கிறது .மந்தவெளி பல ஆண்டுகளாக சென்னையின் கலாச்சார மையங்களில் ஒன்றாக இருக்கிறது.
குறிப்பாக மார்கழி மாதத்தில் இசை மற்றும் நாட்டிய திருவிழாக்களின் போது இந்த சபாக்கள் முக்கிய இடம் பெறுகின்றன. பிரபலமான நாரதகான சபா மயிலாப்பூரில் இருந்து மந்தைவெளிக்கு அருகில் இருக்கிறது. பல புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் . நடன கலைஞர்கள் இந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
மந்தைவெளி பகுதி அருகிலேயே அமைந்துள்ள அடையாறு பூங்கா சர்.சி.வி. ராமசாமி ஐயர் சுற்றுலா பூங்கா இந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கு ஆதாரமாக இருக்கிறது. முன்பு மாங்குரோவ் சதுப்பு நிலமாகவும் கழிவுகளால் நிறைந்த பகுதியாகவும் இருந்த பகுதி இப்போது வளர்ச்சி அடைந்திருக்கிறது. மந்தைவெளிப் பகுதியில் ஆரம்ப காலத்தில் குடியேறிய சில குடும்பங்கள் 1950கள் வரை பழைய அரண்மனைகளின் இடிபாடுகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்த இடிபாடுகள் விஜயநகரப் பேரரசின் ராஜாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே இந்தப் பகுதி அரச குடும்பத்தின் கவனத்தைப் பெற்றது.
மந்தைவெளி பற்றிய செய்திகளை அசை போட்டபடியே நடந்து கொண்டிருந்தான்.
‘1950 களில் , தற்போதைய சிஐடி காலனி பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தென்னந்தோப்புகள், மரங்கள் காய்கறித் தோட்டங்கள் நிறைந்த கிராமமாக இருந்தது. 1970க்கு பிறகு அந்தத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு குடியிருப்பாக மாறியது. மந்தைவெளி வரலாற்றுச் சிறப்புமிக்க மயிலாப்பூர் மற்றும் போர்த்துக்கீசியர்கள் குடியேறிய சாந்தோம் பகுதிகளுக்கு மிக அருகில் இருக்கிறது.
சிஐடி திட்டத்தின் கீழ் நிலங்களை ஒதுக்கப்பட்ட போது ஒருபுறம் இந்துக்களுக்கு மறுபுறம் மங்களூரியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் புகழ் பெற்ற பி எஸ் சிவசாமி பள்ளி (பி எஸ் ஹை ஸ்கூல்) சர்.சி.பி. ராமசாமி ஐயர் பள்ளி போன்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. இந்தப் பகுதியில் பழமையான ஆர்ட் டெகோ பாணி வீடுகளைக் காணலாம். மறுபுறம் நவீன கண்ணாடி கட்டிடங்களும் இருக்கும்.
கென்சிங்டன் கார்டன்ஸ் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மந்தைவெளிக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதிகள் மெட்ராஸ் பிரசிடென்சியின் ராணுவ அதிகாரிகள் தங்குமிடமாக இருந்தது. இது வணிக நோக்கத்தைத் தாண்டி நிர்வாகம் மற்றும் ராணுவத்தை பலப்படுத்தும் இடமாக இருந்திருக்கிறது. அந்தப் பெயரை கென்சிங்ஸ்டன் அவென்யூ என்று பெயர் பெற்றது.
அடையாறு நதியின் பக்கத்தில் இருப்பதால் வெள்ள காலங்களில் இந்தப் பகுதி இயற்கையாகப் பாதிப்புக்கு உள்ளானது.1970 மற்றும் 1980களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் மந்தைவெளி மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் வாழ்ந்த பல சிறந்த வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய பங்கு வகித்தார்கள். டாக்டர் சி பி ராமசாமி ஐயர், மந்தைவெளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த முக்கிய பிரமுகர் ‘
என்ற வரலாற்றுச் செய்திகள் அவனுள் வந்து விழுந்தன.
‘1950 களுக்குப் பிறகு மந்தைவெளிப் பாக்கம் என்பது மயிலாப்பூர் கிராமத்தின் ஒரு பகுதியாக நிர்ணயிக்கப்பட்டு வந்தது. சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்ட போது இது முறையாக நகரத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. இதனால் சாலைகள், வடிகால் அமைப்பு மின்சார விநியோகம் மேம்படுத்தப்பட்டன. மந்தை வெளிச்சாலை மற்றும் சுற்றியுள்ள தெருக்கள் சிஐடி திட்டத்தின் கீழ் சதுரங்க பலகை வடிவில் இருந்தது.
1990களின் பிற்பகுதியிலும் 2000 க்கு முற்பகுதியிலும் சென்னை பறக்கும் ரயில் திட்டம் (சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிஸ்ட் சிஸ்டம் – MRTS) இந்த ரயில் நிலையம் அமைந்த பிறகு அடையாறு திருவான்மியூர் போன்ற பகுதிகளையும் கடற்கரை, எழும்பூர் போன்ற வடக்குப் பகுதிகளையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக மந்தை வெளி மாறியது. இது குடியிருப்புப் பகுதியாக இந்த மந்தைவெளி பரபரப்பாகப் பேசப்பட்டது ‘
என்ற மந்தைவெளியின் செய்திகள் எல்லாம் மலரவனுக்குள் நிறைந்தது.
‘இன்று மந்தைவெளி என்பது பாரம்பரியம், நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் கலந்த ஒரு பண்பாட்டு அடையாளமாக இருக்கிறது.மந்தைவெளிச் சாலையில் மந்தைவெளிப் பேருந்து நிலையம், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் . ஏர்டெல் மண்டல அலுவலகம், பாண்ட்ஸ் நிறுவனத்தின் மண்டல தலைமை அலுவலகம் மற்றும் இந்துஸ்தானி அலுவலகங்கள் மந்தை வெளிச் சாலையில் இருக்கின்றன. அதன் அருகே நாரத கான சபா, தொல்காப்பிய பூங்கா ,ஜெயின் சான்ஸ் உயர்நிலைப்பள்ளி, பி எஸ் சிவசாமி மெமோரியல் பள்ளி சீயோன் பிரார்த்தனை கோபுரம், சன் தொலைக்காட்சி டவர் ஆகியவை இருக்கின்றன
‘ இந்தச் சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது கிரீன்வேஸ் சாலை சந்திப்பில் இருந்து அடையாறு மேம்பாலத்திற்கு அருகில் தொடங்குகிறது. சாலையின் நடுவே மந்தைவெளி பேருந்து நிலையம் மற்றும் சன் டிவி டவர்ஸ் போன்ற முக்கிய அடையாளங்கள் இருக்கின்றன. இது சாந்தோம் நெடுஞ்சாலை அல்லது லஸ் கார்னர் நோக்கிச் சென்று பல முக்கிய சாலைகளுடன் இணைக்கிறது. குறிப்பாக கச்சேரி சாலை ஆர்.கே. மட் சாலையுடன் இது முடிவடைகிறது’ என்பதை நினைத்தான், மலரவன் மந்தைவெளிச் சாலை பல வியப்புகளுடன் நிறைந்து, விரிந்து கிடந்தது.
![]()





