சிறுகதை

சிறுகதை … பட்லூஸ் சாலை..! …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சிறுகதை

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்த ஜெயராஜுக்கு அங்கிருந்த பட்டுல்லா சாலையைப் பற்றி அங்கிருந்த ஒருவர் சொன்னது ஆச்சரியத்தைக் தந்தது.

” தம்பி ,இந்தப் பட்லூஸ் சாலை இருக்கே, இதுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கு. இந்தச் சாலை அந்தக் காலத்தில டிராம் வண்டிகள் வந்த பாதையா இருந்தது. 1950 – 1960களில் டிராம் வண்டிகள், குதிரை வண்டிகள் மற்ற அன்றாட சென்னையின் வாழ்க்கை அடையாளமா இருந்தது. பட் லூஸ் சாலை, லூஸ் கார்னர் சந்திப்பின் மையமாக இருந்தது.

இங்கு பழமையான கட்டிடங்கள், சந்தைகள், மருத்துவமனைகள் சென்னையின் பரபரப்பாக இருந்துச்சு. காலப்போக்குல மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் அது வளர்ச்சி அடைந்தது. ராயப்பேட்டை உயர் சாலை, ஆழ்வார்பேட்டை சந்திப்பு இணைக்கும் ஒரு பகுதியா லூஸ் கார்னர் இருந்தது. இது சென்னையின் பழைய பிரபலமான சந்திப்புகளில் ஒன்று. 1960 கள் வரை இந்த டிராம் வண்டிகள், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை வழியா பயணம் செய்ய உதவியது. இந்தச் சாலை ராயப்பேட்டை பகுதியில் முக்கியமான பகுதிக்குச் செல்வதற்கும் பயன்பட்டது., கடைகள் மருத்துவமனை, வீடுகள், லஸ் கார்னர் பகுதி, பழங்கால கட்டிடங்கள், மாட்டு வண்டி குதிரை வண்டி, சைக்கிள் மற்றும் அழகிய சென்னையைப் பிரதிபலிக்கிறது “

என்று பட்டுல்லா சாலையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார், அந்தப் பெரியவர்.

“இந்தச் சாலை பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் மெட்ராஸ் படையில் கேப்டனாக இருந்த ஆர்கி பால் எர்ஸ்கைன் பட்டுல்லா என்பவரின் நினைவா அந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கு. 1818 ல மெட்ராஸ் கவர்னரின் மெய்க்காப்பாளர் படையின் கேப்டனாக இருந்தவர். இவர் 1824 இல் மரணம் அடைந்தார்.

இந்தச் சாலை, அண்ணா சாலையையும் மவுண்ட் சாலை, ஒயிட் சாலையையும் இணைக்கும் ஒரு முக்கிய சாலையா இருக்கு. ராயப்பேட்டை என்ற பெயர் விஜயநகர பேரரசின் அரசர்களை குறிக்கும் ராயர் என்ற பெயரிலோ அல்லது ஆற்காடு நவாப்புகளை குறிக்கும் ராயா ஆட்சியாளர் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம். இப்பகுதியில் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக ஆற்காடு நவாப்பின் அதிகாரப்பூர்வ அமீர் மகால் இங்கு தான் இருக்கு.

பட்டுல்லா சாலைக்கு அருகில் இருக்கு. ராயப்பேட்டையில் உள்ள மணிக்கூண்டு 1930 களில் ஆர்ட் டெக்கோ பாணியில் கட்டப்பட்டது. அது இன்றும் செயல்பட்டுட்டு வருது .1938 இல் தொடங்கப்பட்ட உட்லண்ட்ஸ் ஹோட்டல் ஜெனரல் பேட்டரி சாலையில் இருந்து மாடர்ன் ஹிந்து ஹோட்டல் முதல் இந்தியப் பாணி சைவ உணவகங்களாக இருக்கு. 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தப் பகுதி அருகிலுள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலை ஆகிய வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனையில் மிக முக்கியப் பங்கு வகித்தது.

இந்தச் சாலையில் ஹிக்ஸ் பங்களா, கேப்டன் ஆர்க்கி பால்ட் பட்டுல்லா சாலையில் வசித்தார். 1898ல் புகழ்பெற்ற ராம்நாத் கோயங்கா, மெட்ராஸ் கிளப் இந்தப் பங்களாவையும் தோட்டத்தையும் வாங்கி தனது வளாகமாக மாற்றினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் குடும்பத்தின் நிறுவனர் ராம்நாத் கோவிந்தா இந்த எஸ்டேட்டை வாங்கி, இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றினார்.

அவசர நிலை எமர்ஜென்சி காலத்தில் பல அரசியல் தலைவர்கள் இங்குள்ள பங்களாவில் தங்கி தலைமறைவாக இருந்தனர். தற்போது அங்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகமா அமைந்துள்ளது. 1798 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆல் நிர்வாக அலுவலகமாக கட்டப்பட்ட அமீர் மஹால், 1876 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்புகளின் இல்லமாக மாறியது. இந்த அரண்மனையில் சுமார் 80 அறைகள் இருக்கின்றன.

1930 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மணிக்கூண்டு கனி அண்ட் சன்ஸ் நிறுவனம் வழங்கியது. இது சென்னையின் மிகப் பழமையான தனித்திருக்கும் மணிக்கூண்டுகளில் ஒன்று. ஜாம் பஜார் பகுதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் 1889 இல் கட்டப்பட்டது. இதற்கு அருகே 1813-ல் நவாப் வழங்கிய நிலத்தில் கட்டப்பட்ட பிரசன்டேஷன் சர்ச் உள்ளது.

வாலாஜாபேட்டை 1819ல் கட்டப்பட்ட முதல் மெத்தடிஸ்ட் தேவாலயம். ராயப்பேட்டை ஜீன்ஸ் லின்ச் என்பதாக தொடங்கப்பட்டது. 1938 இல் உட்லண்ட்ஸ் மற்றும் மாடர்ன் ஹிந்து உணவகங்கள் தொடங்கப்பட்டதன் மூலம் சென்னைக்கு இந்திய பாணி சைவ உணவக் கலாச்சாரத்தை ராயப்பேட்டை அறிமுகப்படுத்தியது. 1939 களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழகம் வந்த போது ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி பீக் இல்லத்தில் தங்கினார். 1911 இல் தொடங்கப்பட்ட அரசு ராயப்பேட்டை மருத்துவமனை சென்னை நகரின் முக்கிய மருத்துவமனையாக திகழ்கிறது “

என்று அந்தப் பெரியவர் சொல்லச் சொல்ல, ஜெயராஜ் அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘”1940களில் நிதி நெருக்கடியில் இருந்த மெட்ராஸ் கிளப் தனது நிலத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனமான ராம்நாத் கோவிந்தாவிற்கு விற்றது. 1975 –1977–ம் ஆண்டு அவசர நிலை எமர்ஜென்சி காலத்தில் போது இந்த எஸ்டேட் முக்கிய அரசியல் மையமாக இருந்தது. இந்திரா காந்தி அரசுக்கு எதிரான போராட்டங்களை கோயங்கா அங்கிருந்தே வழிநடத்தினார். கைது செய்யப்படுவதை தவிர்க்க பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இங்கு உள்ள பங்களாவில் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டனர். கிட்ஸ் பங்களா என்ற வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் இந்தப் பகுதியில் இருக்கிறது “

“அரசு ராயப்பேட்டை மருத்துவமனை 1911 இல் கட்டப்பட்ட முதல் மாவட்டத் தலைமை மருத்துவமனை இம் மருத்துவமனையில் முதல் கண்காணிப்பாளரான கர்னல் டோனோவன் லீஷ் மேனியாசிஸ் என்ற மருத்துவர் அபாயகரமான ஒட்டுண்ணி நோயைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்றினார். அவர் பாடம் நடத்திய கரும்பலகை இன்றும் பாதுகாக்க வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாலையில் உள்ள இந்தப் பள்ளி வெஸ்லி பள்ளி பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்று. நவாப்புகளின் காலத்தில் ஜாம்பஜார் மிக முக்கிய பஜாராக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கட்டிடக்கலை பெரிதும் போற்றப்பட்டது. ஆற்காடு நவாப் வழங்கிய நிலத்தில் கட்டப்பட்ட தேவாலயங்கள் மற்றும் பழமையான மசூதிகள் ராயப்பேட்டை மதநல்லிணக்கத்திற்கு சான்றாக இருக்கின்றன. இந்தாே சார செனிக் மற்றும் இந்து -முகலாய கட்டிடக்கலையின் கலவையாக அமீர் மஹால் கட்டப்பட்டு இருக்கிறது. இதன் நுழைவாயிலில் இன்றும் விசேஷ காலங்களில் முரசு கொட்டும் வழக்கம் உள்ளது “

“பட்லூஸ் சாலையில் டன்லப் நிறுவனத்தின் மையம். 1950 களில் சென்னையின் முக்கிய கார்ப்பரேட் மையமாக இருந்தது. புகழ்பெற்ற டன்லப் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் இங்குள்ள யூனியன் மோட்டார்ஸ் கட்டிடத்தில் நீண்ட காலம் செயல்பட்டது “

“ராயப்பேட்டை பகுதி வெற்றிலை தோட்டங்களாக இருந்தன என்று புகழ்பெற்ற தமிழ் அறிஞர் திரு.வி. கல்யாண சுந்தரம் தனது சுயசரிதையில் ராயப்பேட்டையின் பசுமையான சூழலையும் அங்கிருந்த மரக்கட்டையால் ஆன வெற்றிலை பந்தல்களையும் விரிவாக எழுதியுள்ளார். ராயப்பேட்டையில் பல மருத்துவர்கள், பணியாற்றி இருக்கிறார்கள்.

இதில் டாக்டர் கே.என். கேசரி என்ற புகழ்பெற்ற லோத்ரா டானிக் உட்பட்ட மருந்துகளை தயாரித்து கேசரி கொடிறம் இங்குதான் அமைந்திருக்கிறது. 1900–ம் ஆண்டுகளை தொடக்கத்தில் குழந்தைகளின் கல்லீரல் நோய்க்கான ஜம்மி லிவர் கியூர் என்ற மருந்தைக் கண்டறிந்தவர் இங்கே பணியாற்றினார். இன்றும் ராயப்பேட்டையில் உள்ள ஜம்மி பில்டிங்ஸ் கப்பல் போன்ற ஒரு தனித்துவமான கட்டிடக்கலையைக் கொண்டது. மோனஹன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1858 ல் தொடங்கப்பட்டது.

சென்னையின் பழமையான புராட்டஸ்டண்ட் பள்ளிகளில் ஒன்று. 1954ல் தொடங்கப்பட்ட சிறுவர் கிளப் சங்கம் குழந்தைகளுக்கான தனித்துவமான ஒரு சமூக அமைப்பாக ராயப்பேட்டையில் இயங்கி வருகிறது .இன்று மயிலாப்பூரில் புகழ்பெற்று விளங்கும் நாரத கான சபா 1950 களில் ராயப்பேட்டையில் உள்ள ஒரு காலி மைதானத்தில் தான் முதலில் தொடங்கப்பட்டது. “

“ராயப்பேட்டையில் உள்ள பட்டுல்லா சாலை சுமார் 400 மீட்டர் நீளம் கொண்டது .இது அண்ணா சாலையில் மவுண்ட் ரோட்டில் உள்ள ஸ்பென்சர் சிக்னல் அல்லது எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் ஒரு முனையில் தொடங்குகிறது .இந்தச் சாலை ராயப்பேட்டையில் உள்ள ஒயிட் சாலைச் சந்திப்பில் முடிகிறது”

என்று அந்தப் பெரியவர் சொன்னபோது, பட்டுல்லா சாலையின் மொத்த விவரங்களையும் அறிந்தான், ஜெயராஜ்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *