அறைகள் சொல்லும் கதைகள் கதைகள் சிறுகதை

சிறுகதை … தொடருதே … மு.வெ .சம்பத் ..

Makkal Kural Official

எழிலரசன் , எழிலரசி இருவருக்கும் ஒரே மகள். அவள் பெயர் இளவேனி . இளவேனி கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கிறார். எழிலரசன் நேர்மறை எண்ணம் கொண்டவர்.

அதே தெருவில் வசிக்கும் நிகிலன், நிகிலா இருவருக்கும் ஒரே மகள். அவள் பெயர் நிலமகள் . நிலமகள் இளவேனியுடன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கிறார். நிகிலன் எதிர்மறை எண்ணம் கொண்டவர்.

நிகிலன் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். அது பெரும்பாலும் எதிர்மறையாக இருக்கும். நல்ல வார்த்தைகளே நிகிலன் வாயில் இருந்து வராது. அந்த ஏரியா மக்கள் நிகிலனை கண்டாலே ஒளிந்து விடும் அளவிற்கு அவர் நடவடிக்கை இருந்தது. தனது அப்பா செய்கையினால் வருத்தப்பட்டாலும் நிலமகளால் எதுவும் செய்யமுடியவில்லை. நிலமகளுக்கு ஒரே தோழி இளவேனி தான். ஆனால் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வருவதில்லை. நிகிலன் செய்கைதான் இதற்கு காரணம். நிலமகள் இளவேணி இருவரும் கல்லூரியில் ஒன்றாகவே திரிவார்கள். படிப்பில் சந்தேகங்கள் இருந்தால் கல்லூரி ஓய்வு நேரத்தில் கலந்து தெரிந்து கொள்வார்கள்.

இளவேனிக்கு சில சமயம் நிலமகளை நினைத்தால் வருத்தம் ஏற்படும்.

நிகிலன் தெருவில் ஒரு ரவுண்டு போய் வந்தாலே அவரால் ஏதாவது பிரச்சனை வந்து விடும். ஆனால் சாமர்த்தியமாக நழுவி வந்து விடுவார் நிகிலன். நிகிலன் தனது மகள் நிலமகள் யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார். எந்த ஒரு விழாவிற்கும் அனுப்ப மாட்டார். தானும் கூட்டிக்கொண்டு செல்ல மாட்டார். நிலமகள் தனது அப்பாவிடமிருந்து சற்று விலகியே நிற்பார். நிலமகள் படித்ததும் ஒரு வேலையில் சேர்ந்து வெளி ஊர் சென்றால் நல்லது என நினைப்பார்.

இளவேனியிடம் தான் நிலமகள் தனது எண்ணங்களை பரிமாறிக்கொள்வார். நிகிலன் வீட்டில் சில சமயங்களில் தனது மனைவியிடம் நான் சொந்தக்கார பையன்களுக்கு என் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்பார். அவர் மனைவி மனதிற்குள் யாரும் உங்கள் வீட்டிற்கு பையனை தர மாட்டார்கள் என்று கூறிக்கொள்வார் .

மகளே தன்னிச்சையாக செயல் பட்டு தனது சொந்தக் காலில் நிற்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தாள் நிலமகள் அம்மா .

நிலமகள் வீட்டில் அப்பாவுடன் கல்லூரி சம்பந்தமானவற்றையே பேசுவார். மொத்தத்தில் அந்த வீட்டில் நிகிலன் குரல் ஒன்றுதான் கேட்கும். மற்றவர் எதாவது பேசினால் அதில் குற்றம் கண்டு பிடித்து குதிப்பார் நிகிலன். நிகிலன் பழைய நண்பர்கள் அழைத்தால் அங்கு தவறாமல் செல்வார். அவர்களுக்கு இவரைப்பற்றி நன்கு தெரியுமாதலால் இவர் போக்கிலேயே சென்று விடுவார்கள். நிகிலன் அவர்களுடன் நன்கு சிரித்து பேசி மகிழ்வார். எதிர் மறை கருத்துக்களை கூடிய மற்றும் தவிர்ப்பார்.

இளவேனி வீட்டிலோ அவளுக்கு நிறைய சுதந்திரம் அளித்திருந்தார் எழிலரசன் . ஆனால் இளவேனி தான் எண்ணுவது சரி என்றால் மட்டுமே செய்வாள். அனாவசியமாக எங்கும் செல்ல மாட்டார் . வீட்டில் தேவைக்கு மட்டுமே பேசுவார் . பொது கருத்துக்கள் , பொது விவாதங்கள் வீட்டில் வரும் போது தனது கருத்தை துணிந்து கூறுவார். தனது கருத்தை ஏற்க வேண்டும் என நினைக்க மாட்டார். இந்த வீட்டில் எப்போதும் அமைதியே நிலவும். எழிலரசன் யாரையும் ஒப்பிட்டு எந்த கருத்தையும் கூற மாட்டார். நேர்மறை எண்ணங்கள் உடன் தான் பேசுவார். இவருக்கு தனி மரியாதை எப்போதும் உண்டு. அடுத்தவர் விஷயத்தில் தலையிட மாட்டார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் இளவேனி மற்றும் நிலமகள் இருவரும் சந்திக்க வாய்ப்பே இல்லாமல் போனது. அடுத்த சில நாட்களிலில் நிலமகள் இளவேனிக்கு போன் செய்தாள். கல்லூரியில் நாளை கேம்பஸ் இன்டெர்வியூ இருப்பதாகக் கூறி நாளை கல்லூரிக்கு வரவேணும் என்றார்.

அடுத்த நாள் நடந்த கேம்பஸில் இளவேனி மற்றும் நிலமகள் இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்தது.

நிலமகள் அப்பா நிகிலன் சரி என்று ஒரு வார்த்தை சொல்லி மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாய் என்று கேட்கவில்லை. ஆனால் இளவேனி வீட்டில் மகிழ்வலை தவழ்ந்தது.

இருவருமே சென்னையில் கம்பனிக்கு பக்கத்தில் ஒரு வீடு எடுத்து தங்கினார்கள் .இருவரும் வீட்டில் வேலையை பகிர்ந்து கொண்டு மகிழ்வாய் பணியை செய்து கொண்டிருந்தார்கள். எழிலரசன் அவரது மனைவி உடன் அடிக்கடி வந்து தங்கி விட்டு செல்வார்கள். ஆனால் நிகிலன் எப்போதாவது வந்து பார்த்து விட்டு செல்வார் . காலையில் வந்தால் இரவு கிளம்பி விடுவார். நிகிலன் மனைவியுடன் ஒரு நாளும் வந்ததில்லை. நிலமகள் எவ்வளவு கேட்டுப்பார்த்தும் நிகிலன் மனைவியை அனுப்ப சம்மதிக்கவில்லை .

நாட்கள் உருண்டோட எழிலரசன் இளவேனிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து பக்கத்து ஊரில் உள்ள ஒரு பையனை முடிவு செய்தார் . அவர் சென்னையில் நன்கு லாபமாக இயங்கும் ஒரு கம்பெனியில் பணி புரிகிறார். பேச்சு வார்த்தை மற்றும் பெண் பார்க்கும் படலம் முடிந்து திருமண தேதியும் குறிக்கப்பட்டது .

திருமணம் தடபுடலாக நடந்தது. இளவேணியும் , மாப்பிள்ளை இன்பசேகரனும் தனி வீடு எடுத்து தங்கினார்கள்.

நிலமங்கைக்கு துணையாக அவர் கம்பெனியில் வேலை பார்க்கும் நிரஞ்சனா இணைந்து கொண்டார். இப்பவும் நிலமகள் எவ்வளவு கெஞ்சியும் நிகிலன் மற்றும் அவர் மனைவி இங்கு வரவே இல்லை.

நிலமங்கைக்கும் நிகிலன் தூரத்து சொந்தக்காரர் மகனை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். அவர்கள் நிலமங்கை குணத்திற்கே சம்பந்தம் செய்வதாக கூறினார்கள். பேச்சுக்கு எதிர் மறையாக செய்தார் நிகிலன். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து திருமணம் நடந்தது நல்ல முறையில்.

இளவேனி , நிலமகள் கம்பெனியில் வேறு வேறு துறையில் மாற்றப்பட்டதால் பார்ப்பதே அரிதானது. அலுவலகத்தில் தொடர்பு கொள்வதருக்கும் நேரம் கிடைக்கவில்லை.

ஊரில் ஒரு சுப நிகழ்வுக்கு வந்த இருவரும் சந்தித்து கொண்டார்கள். அப்போது பேசும் போது இளவேனி தனது கணவர் எதிர் மறை எண்ணங்கள் நிறைய உள்ளார் என்றார் . எனது அப்பாவிடம் பேசும் போது சில சமயம் கோபப்படுகிறார். தற்போது எனது அப்பா நீங்கள் செய்வதை செய்யுங்கள். நீங்கள் பல விஷயங்கள் அறிந்தவர் என்று கூறி சண்டை வராமல் பார்த்துக்கொள்கிறார். நான் அவர் கேட்டதை செய்து விட்டு ஒதுங்கி விடுவேன் என்றார்.

நிலமகளோ தனது கணவர் நேர்மறை எண்ணம் உள்ளவர். எனக்கு மிகவும் மகிழ்வாய் உள்ளது, ஆனால் எனது அப்பாவிற்கும் அவருக்கும் ஏட்டுக்கு போட்டி தான் என்றார்.

அப்போது யாரோ இவர்களை கூப்பிட , இருவரும் இந்த எண்ண போராட்டம் தொடருகிறதே, ஒருவரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் போல் உள்ளதே, பிறக்கும் போது இருந்த குணம் போக போக எப்படி மாறுகிறதோ , மாற்றிக்கொள்ளும் பக்குவம் மறந்தே போகுதே என்று வருத்தம் கலந்த சிரிப்புடன் சொல்லி உள்ளே சென்றார்கள். அங்கு வித்தியாசமாக நிகிலன் இளவேனி கணவருடன் பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட எழிலரசன் இதுவும் தொடருமா என்று ஒரு சிரிப்புடன் மனதிற்குள் நினைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *