கதைகள் சிறுகதை

சிறுகதை .. கான்ஸ்டபிள் சாலை..! … ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சிறுகதை

..

கான்ஸ்டபிள் சாலை..!

ராஜா செல்லமுத்து

விரைந்து செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தார் ஒரு போக்குவரத்துக் காவலர் அவரிடம் வந்த தென்னவன் தயங்கியபடியே, “சார் ‘கான்ஸ்டபிள் சாலை’ எங்க இருக்கு?” என்று கேட்டான். அவனை மேலும் கீழும் பார்த்த அந்தப் போக்குவரத்து காவலர்

“எங்க இருந்து வாரீங்க?” என்று கேட்டார்.

” வெளியூர்ல இருந்து சார். ஐசிஎப்–ல எங்க சொந்தக்காரங்க வேலை செஞ்சிட்டு இருக்காங்க. அவங்க கான்ஸ்டபிள் சாலையில் குடியிருக்கிறதா சொன்னாங்க. அதுதான் அங்க போயிட்டு இருக்கேன். எனக்கு அட்ரஸ் தெரியல?” என்று சொன்னான் தென்னவன்.

” இப்படியே நேரா போய் ரைட்ல கட் பண்ணீங்கன்னா அங்க தான் கான்ஸ்டபிள் சாலை இருக்கு” என்று அவர் சொல்ல, ” ரொம்ப நன்றி சார்” என்று சொன்ன தென்னவன் மறுபடியும் அந்தப் போக்குவரத்து காவலரிடம் வந்தான்.

“சார், நானும் எத்தனையோ சாலைகள் பேரக் கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன சார் கான்ஸ்டபிள் சாலை? எதுக்காக அந்த பேர வச்சிருக்காங்க? ” என்று தென்னவன் கேட்க.

” அது ஒரு பெரிய கதை தம்பி. சொல்லவா என்ன? என்று அந்தப் போக்குவரத்துக் காவலர் கேட்க,

” சொல்லுங்க சார். கேட்டுட்டே போறேன்” என்றான், தென்னவன்.

“கான்ஸ்டபிள் சாலைக்கு ஒரு பெரிய வரலாறு இருக்கு. இந்தச் சாலை பெரம்பூர்ல இருக்கக்கூடிய ரயில்வே குடியிருப்பு பகுதிகள், பணிமனையைப் பாதுகாக்கிறதுக்காக அந்தச் காலத்துல பிரிட்டிஷ்காரங்க இந்தச் சாலையோட ரெண்டு பக்கமும் போலீஸ் பூத் அமைச்சு அங்க கான்ஸ்டபிள்கள நிக்க வச்சுருக்காங்க. அங்க நிறைய ரயில்வே குடியிருப்புகள் இருந்திருக்கு. இந்தச் சாலையில தெற்கு ரயில்வே குடியிருப்பு ஐசிஎப் (ICF) பெரம்பூர் லோகோ ( Perambur Loco works) ரயில்வே மருத்துவமனை நிறுவனங்கள் ரயில்வே ஊழியர்களைப் பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் இந்தச் சாலையில காவலர் நடமாட்டம் தொடர்ந்து இருந்திருக்கு. இதன் காரணமாகவே இதைச் கான்ஸ்டபிள் சாலைன்னு சொல்றாங்க .

கான்ஸ்டபிள் சாலையைப் பற்றிய வரலாறைத் தென்னவனிடம் சொல்லிக் கொண்டே போக்குவரத்தையும் சீர்படுத்திக் கொண்டிருந்தார், அந்தப் போக்குவரத்துக் காவலர்.

சமீப காலமா இந்தச் சாலையில இரண்டு பக்கமும் காங்கிரீட் சுவர் எழுப்பினதுனால மக்கள் நடமாட்டம் அதிகரிச்சிருக்கு. இதனால குற்றங்களைத் தடுக்க முடியும் அப்படின்னு இந்தச் சுவரை எழுப்பி இருக்காங்க. 1850கள்ல கிரேட் சதர்ன் ஆப் இந்தியா ரயில்வே நிறுவனம் பெரம்பூரில் ரயில் பெட்டிகள் பழுது பார்க்கும் பணிமனைகளை ஆரம்பிச்சாங்க.

இந்தப் பணிமனைகள் ஆரம்பிக்கும் போது, அங்க வேலை செய்ற ஊழியர்களுக்கு சுற்றி குடியிருப்புகள் இருந்தது. இந்தக் கான்ஸ்டபிள் சாலை இந்தக் குடியிருப்பு மையத்தில் அமைந்தது பிரிட்டிஷ் காலத்துல ரயில்வே சொத்துக்கள், ஊழியர்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு ரயில்வே காலனி அதன் நுழைவாயில்கள் காவல்துறையினர் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் இந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டதனால இது கான்ஸ்டபிள் சாலையாக மாறி இருக்கலாம்.

இந்தச் சாலையைச் சுத்திப் பல வீடுகள் பிரிட்டிஷ் காலத் செங்கல் கட்டிடத்த அந்தக் காலத்து வடிவத்தில் இருக்கு .இந்தச் சாலையானது ஒரு காலத்துல சென்னை மாநகரத்தில் மிக முக்கியமான ரயில்வே மையமா இருந்திருக்கு. பெரம்பூர் வளர்ந்ததற்கு அடையாளமா இந்தச் சாலை இருக்கு .சுதந்திரத்திற்கு அப்புறம் தெற்கு ரயில்வே இருந்தது.

இந்த கான்ஸ்டபிள் சாலையில ஆங்கிலாே – இந்திய ஆட்கள் அதிகமா வாழ்ந்திருக்காங்க. பெரம்பூர்ல தான் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஆங்கிலோ -இந்திய மக்கள் வாழ்ந்த பகுதியா இருந்திருக்கு. பிரிட்டிஷ் ரயில்வே நிறுவனங்களான மெட்ராஸ் ரயில்வே கம்பெனி இங்க இருந்திருக்கு. இங்க குடியிருந்த ஆங்கிலோ – இந்தியக் குடும்பங்கள் தனித்துவமான கலாச்சாரத்துடன் வாழ்ந்து இருக்காங்க .இந்தப் பகுதிகள்ல தேவாலயங்கள், புகழ் பெற்ற பள்ளிகள் இருக்கு. உதாரணமா டான் போஸ்கோ பள்ளி, பல சமூகக் கூடங்கள், அமைஞ்சிருக்கு.

பிரிட்டிஷ் இந்தியாவின் ரயில்வேயின் வளர்ச்சி ஆங்கிலாே – இந்தியர்களின் சமுதாய முன்னேற்றம் இந்தச் சாலையின் பெருமையா இருந்திருக்கு. பெரம்பூர் ஒரு காலத்தில் ராணுவ முகாம் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பெயர் பெற்றது. பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் தங்கி இருந்த முகாம்களை குறிக்கிறது. பெரம்பூரில் ஒரு காலத்துல துப்பாக்கிப் பொடி தயாரிக்கும் சாலை ,கன் பவுடர் ஃபேக்டரி இருந்ததாம். புளியந்தோப்புல இருந்து வரும் இந்தச் சாலை இன்னும் பவுடர் மில் சாலை, டான் போஸ்கோ பள்ளி வளாகத்தை இணைக்கும் வழியா இருக்கு.

இப்ப இருக்குற ஜி கே எம் காலனி அமைந்துள்ள பகுதி முன்னாடி பட்மேடு என்றும் சொன்னாங்க. ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடும் பயிற்சி செய்ய இந்த மண்மேடுகளைப் பயன்படுத்தி இருக்காங்க. கான்ஸ்டபிள் சாலை இந்த ராணுவ மற்றும் ரயில்வே மையங்களுக்கு மிக அருகில் இருந்ததனால இங்க பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட காவலர்கள் அல்லது சிறிய காவல் சாவடிகள் காரணமாக இந்தப் பேர் வந்திருக்கலாம். சமீபத்தில் பெரம்பூர் பேரெக்ஸ் சாலையில மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் போது மிகப் பழமையான பிரிட்டிஷ் வடிகால்கள்அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்த வடிகால் பிரிட்டிஷ் காலத்தில் உள்கட்டமைப்பைச் சொல்லுது .கான்ஸ்டபிள் சாலைங்கிறது வெறும் சாலை மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சி, நிர்வாகம் ,ரயில்வே செயல்பாடு ஆகியவளை குறிக்குது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் இந்தியா தயாரிக்கப்பட்ட வரைபடங்களை ஆய்வு செஞ்சா காவலர் குடியிருப்புகள், காவல் நிலையம் குறிப்புகளை அறியலாம்.

தெற்கு ரயில்வே அல்லது அதற்கு முந்திய மெட்ராஸ் ரயில்வே நிறுவனங்கள் பழைய கோப்புகளை பார்க்கும்போது இந்த கான்ஸ்டபிள் சாலை முக்கியத்துவமா இருந்திருக்கு. பெரம்பூரில் வாழ்ந்த ஆங்கிலோ – இந்திய சமூகம் பற்றிய வரலாற்று புத்தகங்கள் செய்தி இருக்கு. 1856 ஆம் ஆண்டு மெட்ராஸ் சதர்ன் மஹரட்டா ரயில்வே இங்க தான் ஆரம்பிச்சிருக்கு. கான்ஸ்டபிள் சாலை இந்தக் குடியிருப்பு, பெரம்பூர்ல ஒரு பகுதியாகவே உருவானது .1857 சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு ரயில்வே போன்ற முக்கிய உட்கட்டப் பாதுகாப்புக்காக கான்ஸ்டபிள் சாலை உருவானது.

இந்தச் சாலை பற்றி மேலும் விவரங்கள் தேடணும்னா பெரம்பூர் ஹிஸ்டரி ஆங்கிலோ- இந்தியன் கம்யூனிட்டி, ரெக்கார்ட்ஸ் சதர்ன் ரயில்வே பெரம்பூர் .ஆர்.சி.எஸ் கான்ஸ்டபிள் ரோடு ,ஓல்ட் மெட்ராஸ் மேப் பெரம்பூர் பேரக்ஸ் போலீஸ் ஸ்டேஷன். ஹிஸ்டரி ஆஃப் மெட்ராஸ் ரயில்வே கம்பெனி பெரம்பூர் .ஆரிஜின் ஆப் நேம் கான்ஸ்டபிள் பெரம்பூர் இப்படிப்பட்ட வரலாறுகளைத் தேடினா கண்டிப்பா உங்களுக்கு இந்தச் சாலையுடைய வரலாறு இன்னும் நிறையத் தெரிய வரும்

கான்ஸ்டபிள் சாலையில ஒவ்வொரு முனையிலும் ஒரு காவல் சாவடி போலீஸ் பூத் இருந்திருக்கலாம் இருந்த போதும் போதிய வெளிச்சம் இல்லாமல் குற்ற செயல் நடந்ததாக 2014 ஆம் ஆண்டு ஹிந்து பத்திரிகையில குறிப்பிட்டிருக்காங்க. இது தற்போதைய காலத்தில கூட அந்தச் சாலை தொடர்புடையதா இருக்கு .கான்ஸ்டபிள் சாலை வரலாறுங்கிறது பெரம்பூர் ரயில்வே தொழிலாளர்கள், ஆங்கிலோ – இந்தியர்களின் வாழ்க்கை, இந்தச் சாலையின் வரலாறு சொல்லுது “

என்று அந்தப் போக்குவரத்துக் காவலர் சொல்லிக் கொண்டே, வாகன ஓட்டிகள் நெரிசல் மிகுந்த பெரம்பூர் பேரக்ஸ் சாலையைத் தவிர்க்க கான்ஸ்டபிள் சாலையைப் பயன்படுத்துறாங்க. இந்தச் சாலையின் ஒருமுனை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பகுதிக்கு பக்கத்தில முடியுது. வில்லிவாக்கம் செல்ல வாகன ஓட்டிகளும் இந்த சாலையைப் பயன்படுத்துறாங்க.

இந்தச் சாலை ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் மையமாக அமைந்துள்ளது, கான்ஸ்டபிள் சாலையானது பல சிறிய தெருக்கள் மற்றும் சந்துக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைச் சுற்றியள்ள பகுதிகளுக்கு எளிதாகச் செல்லலாம். சுருக்கமா சொல்லப் போனால் கான்ஸ்டபிள் சாலையானது பெரம்பூரில் முக்கிய ரயில்வே நிறுவனப் பகுதியைச் சுற்றி இருக்கிற குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கியமான இணைப்பு பாலமாகச் செயல்படுகிறது” என்றார் அந்தப் போக்குவரத்துக் காவலர்.

அவர் கான்ஸ்டபிள் சாலையைப் பற்றிச் சொன்னாலும் அவரின் கவனம் கொஞ்சம் கூட கவனம் சிதையவில்லை. அவர் சொன்ன அத்தனையும் கேட்டுக்கொண்ட தென்னவன்

” ரொம்ப நன்றி சார். கான்ஸ்டபிள் சாலைக்குத் தான் வந்தேன். ஆனா, நீங்க கான்ஸ்டபிள் சாலையைப் பற்றிய எல்லா வரலாறையும் சொல்லிட்டிங்க. ரொம்ப நன்றி “

என்று சொல்லி விட்டு, உறவினர்கள் வசிக்கும் கான்ஸ்டபிள் சாலையை நோக்கி நடந்தான், தென்னவன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *