சிறுகதை

சிறுகதை … காதல் பாடம் … ஓட்டேரி செல்வகுமார் …

Makkal Kural Official

சுபாஷ் + பிரியங்கா இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.

சுபாசுக்கு பிரியங்கா மேல் ஒரு கண் இருக்கத்தான் செய்தது.

அவளின் நேர்த்தியான தலைமுடி அழகும் வட்ட வடிவ முக அழகும் சிரிக்கும் போது பளிச்சென்று தெரியும் அவள் பல்லழகும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது

சுபாஷ் பிரியங்கா வகுப்பறையில் பெரும் பகுதி சந்தித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர இருவரும் நண்பர்களாக இல்லை; காதலர்கள் ஆகவும் மாறவில்ல

ஏதோ சும்மா பேருக்கு ஒன்றாக வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியாக மட்டும் இருந்து கொண்டு இருந்தனர்

இன்று மாலை 6 மணிக்கு

கல்லூரியில் கலாச்சார விழா நடக்கிறது; விழாவில் பங்கு பெற

மாலை ஐந்து மணிக்கு சுபாஷ் தயாராகி கல்லூரி வாசலில் பைக்கில் வந்து இறங்கி நின்றான். கூடவே ஒரு கையில் பூங்கொத்துடன் ஒரு கடிதத்தையும் வைத்திருந்தான் பிரியங்காவிற்காக…

மாலை 5:30 மணி இருக்கும்டி சர்ட் ஜீன்ஸ் போட்டு கொண்டு பிரியங்கா ஸ்டைலாக ஆட்டோவில் வந்து இறங்கினாள்.

உடனே டூத் பேஸ்ட்டுக்கு விளம்பரம் கொடுப்பது மாதிரி வாயெல்லாம் பல்லாக சுபாஷ் பிரியங்காவை நோக்கி நகர்ந்தான்

சுபஷை பார்த்ததும் பிரியங்கா இதழில் தேன் தடவி புன்னகை வர வைத்துக் கொண்டு ” வா சுபாஸ் “என்றாள். பிரியங்கா உனக்காக ஒரு கிப்ட் கொண்டு வந்திருக்கிறேன் என்று தனது கையில் இருக்கும் பூங்கொத்தை அவள் கையில் கொடுத்தான்…

கூடவே அவன் கையில் வைத்திருந்த அந்த ஒரு கவரையும் கொடுத்தான். பிரியங்காவும் மிகவும் ஆச்சரியத்துடன் அதை வாங்கிக்கொண்டு அவனை பிரமிப்பாக பார்த்தாள். அந்தப் பார்வையில் அர்த்தமுள்ள காதலும் இருந்தது அதேசமயம் சின்ன பிரமிப்பும் இருந்தது.

பூங்கொத்து அந்த கடித கவர்அவளிடம் கொடுத்ததில் சுபாஷுக்கு மிக்க மகிழ்ச்சி அதில் என்ன எழுதி இருக்கிறது ? என்பதுதான் மிகப்பெரிய சஸ்பென்ஸ்

கல்லூரி கலாச்சார விழா முடிந்து சுபாஷ் வீடு திரும்பினான்.

இந்நேரம் பிரியங்காவும் வீட்டுக்கு போய் அந்த கவரைபிரித்து கடிதத்தை படித்து இருப்பாள் இன்று சுபாஷ் நினைத்துக் கொண்டிருந்தபோது

சுபாஷின் செல்ஃபோன் சினுங்கியது. உடன் எடுத்து “ஹலோ …ஹலோ…”அவன் பேச முயன்ற பொழுது இணைப்பு துண்டிக்கப்பட்டது.

போன் வந்தது நம்பர் இல்லாத நம்பராக இருப்பதால் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை

இப்படியே அன்று இரவு முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவன் செல்போன் அலறி அலறி அழுது கொண்டிருக்கிறது. சுபாஷும் பதிலுக்கு “ஹலோ … ஹலோ” என்று பேசி பேசி ஓய்ந்து கடைசியில் ‌விடியற் காலை நான்கு மணி அளவில் தூங்கி போனான் சுபாஷ்.

மறுநாள்காலை 10 மணி இருக்கும் .பிரியங்கா சுபாஷ்காக கல்லூரி வாசலில் காத்திருந்தாள். சுபாஷ் தூங்கி வழிந்து எழுந்து முடித்து பத்தரை மணிக்கு மேல்தான் கல்லூரியை நெருங்கினான்.

பிரியங்கா சுபாஷ் நோக்கி ஓடிவந்து”ஏன் இவ்வளவு லேட்டா வர ?”என்று சுபாஷ் பார்த்து பிரியங்கா கேட்க

“அது வந்து …”என்று அந்த போன் கால் பத்தி சொல்லலாமா ? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

சுபாஷ்

“என்ன…

நான் ஃபோன் பண்ணி ஃபோன் பண்ணி நான் பேசாம நீ மட்டும் ‘ஹலோ ஹலோ “கத்திக்கிட்டு தூங்காம இருந்துட்டியா? பிரியங்கா நக்கலுடன் கேட்டது தான் தாமதம்

சுபாஷுக்கு திடுக்கென்று ஆகிவிட்டது .

“என்ன இவ …போன் பண்ணி நம்ம கிட்ட பேசாம நம்மள ஒரே டென்ஷன் ஆக்கிட்டாளே”என்று மனசுக்குள் கருகிக் கொண்டிருந்தபோது.

“ஒன்றுமே எழுதாத ஒரு கவர் மட்டும் எனக்கு லவ் லெட்டர் அப்படின்னு நீ குடுப்ப… அத வாங்கிட்டு நான் உன்ன லவ் பண்ணனுமா?”அதனாலதான் உனக்கு நைட் எல்லாம் கம்ப்யூட்டர்ல இருந்து உன் செல்போனுக்கு போன் பண்ணி உன்ன டார்ச்சர் செய்துவிட்டேன் ..ஸாரி…” என்றாள் பிரியங்கா

சுபாஷ் பிரியங்காவை மேலும் கீழும் பார்த்தவாறு “நான் உனக்கு கொடுத்தது லவ் லெட்டர் இல்ல பிரியங்கா. அது என்னோட வாழ்கை. அதனாலதான் அது ஒரு கடிதம் எதுவும் எழுதாமல் சும்மா ஒரு கவரை கொடுத்தேன். நீ அது புரிஞ்சுக்காம எனக்கு நைட் எல்லாம் போன் பண்ணி பேசாம இருந்து ஒரே டார்ச்சர் பண்ணிட்டே… என் மேல உனக்கு லவ் இருக்கு ஆனா மரியாதை இல்ல…என்ன புரிஞ்சிக்க தெரியல… சோ நான் உன்ன லவ் பண்ண முடியாது மன்னிச்சுக்க…”என்று சொல்லி சுபாஷ் அங்கிருந்து நகர்ந்து வேக வேகமாக சென்றான்

“அடப்பாவமே…ஒரு நல்ல பையன் மனசு புரிஞ்சுக்காம ஃபோன் டார்ச்சர் பண்ணிஅவனை விரட்டிவிட்டு புதுசா காதல் பாடம் கத்துகிட்டோமே “

என்று நினைத்தபடியே…

கண்கலங்கி கண்ணீர் சிந்தினாள் பிரியங்கா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *