இன்று வசுந்தராவுக்கு ஐந்தாவது பிறந்தநாள் இரவு மணி எட்டு இருக்கும் பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து கிருஷ் பேக்கரியில் கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து விட்டார்கள்
வீட்டை சுற்றிலும் புதிய அலங்காரமாக பொருள்களும் “ஹாப்பி பர்த்டே” என்கின்ற வாசகர்களும் ஆங்காங்கே எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது
அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்களும் சிறுமிகளும் வச்சுவின் அண்ணன் பவன் நண்பர்களும் அங்கே கூடிவிட்டனர்
வச்சு தன் பங்கிற்கு பிறந்தநாள் ஆடை அணிந்து கொண்டு வந்து அலங்காரமாக நின்றால் பெரியவர்கள் அனைவரும் கூடிவிட்டனர்
ஆனால்… அந்த சமயம் வரவேண்டிய பிளாக் பாரஸ்ட் என்ற பெயரில் அழைக்கப்படும் கேக் மட்டும் ஆர்டர் கொடுத்த கிரிஷ் பேக்கரியில் இருந்து இன்னமும் வரவில்லை என்பதால் …
எல்லோரும் கேக்கின் வரவை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக கொண்டிருக்கதீடிர் என்று வச்சு சொன்னாள் “கேக் இல்லாவிட்டால் என்ன? சாக்லேட் இருக்குல்ல! … எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்து ஜாலியா பர்த்டே கொண்டாடலாம்மா” என்று
அதைக்கேட்ட அவள் அம்மா அப்பாவும் விழிக்க மற்றும் அவளுடைய நண்பர்களும் மற்றும் பவன் அண்ணனுடைய நண்பர்களும் மற்றும் அங்கு கூடியிருந்த பாட்டி + தாத்தா போன்ற பெரியவர்களும் ஒரே வியப்பாக வச்சுவை பார்த்தனர்.
எதற்கெடுத்தாலும் அடம்பிடித்து அழுது கேட்கும் வச்சு தன் பிறந்தநாளுக்கு கேக் வேண்டாம் சாக்லேட் போதும் என்று சொன்னது தான் அந்த பெரிய வியப்பிற்கு காரணம்
வச்சு அங்கு இருப்பவர்களுக்கு எல்லாம் தனது பிறந்த நாள் பரிசாக சாக்லேட் தந்தாள்எல்லோரும் “ஹாப்பி பர்த்டே “பாடலை வச்சுவிற்காக பாடினர்பின்பு ஒவ்வொருவராக வச்சு கைகுலுக்கி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர
வச்சுவின் இந்த செயலில் பல அர்த்தங்கள் இருந்தது என்றாலும்… பிளாக் ஃபாரஸ்ட் என்கிற பெயரில் அழைக்கப்படும் அந்த கேக் அரை மணி நேரம் தாமதமாக கிரீஸ் பேக்கரியில் இருந்து இப்பொழுது தான் வந்தது
வீட்டு பெரியவர்கள் அந்த கேக் வாங்கி வந்து வீட்டு ஹலில் வைக்கஅந்தக் கேக்கை சிறிதும் சட்டை செய்யாமல் வச்சு மற்ற பாப்பாக்க ளுடன் விளையாடிக் கொண்டிருந்தது தான் அங்கிருந்து பெரியோர்களுக்கும் அண்ணன் பவனுக்கும் ஹைலைட் ஆச்சிரியமாக இருந்தது.
ஆமாம்… ஹேப்பி பர்த்டே என்ன அந்த கேக்கிலா இருக்கிறது?நாம எப்படி மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துகிறோம் என்பதிலும் நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதிலும் தான் இருக்கிறது. இந்த”ஹேப்பி பர்த்டே” தான் மிக்க மகிழ்ச்சி யான ஹாப்பி பர்த்டே என்பதை வச்சு சொல்ல தெரியாமல் விட்டாலும் மற்ற பெரிவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஏதோ ஒன்றை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்ததுதான் என்பது மட்டும் மிகப்பெரிய உண்மை.
ஆமாம்… அது பெரிய உண்மைதான்!!ஓ! இப்படித்தான் இன்று வச்சு என்கிற வசுந்தராவின் பிறந்த நாள் ஒரு வழியாக இனிய கொண்டாடப்பட்டது. இதில் வச்சுவிற்க்கும் மகிழ்ச்சி அவள் வீட்டாருக்கும் மிக்க மகிழ்ச்சி என்பதை இனி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அதே சமயம் குழந்தை வச்சுவின் இந்த அறிவுபூர்வமான செயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாமும் சொல்லிக் கொள்வோம் வாருங்கள்….
![]()





