கதைகள் சிறுகதை

சிறுகதை – அறியப்படாத சமைலறை குசும்புக் – ஆர். வசந்தா

Makkal Kural Official

அறியப்படாத சமைலறை குசும்புகள்

––––––––––––––––––––

ஆர். வசந்தா

–––––––––––––––––––––

இது ஒரு அரிய குசும்பாகும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

அருப்புக்கோட்டை என்ற ஊரில் ஒரு பிரபலமான சுண்டல் வகை ஒன்று உள்ளது. அந்த சுண்டலை அனைவரும் ரசித்து உண்பார்கள். திருவிழாக் காலங்களில் ஒரு பெரிய அண்டா நிறைய குறிப்பிட்ட சுண்டலைக் கொண்டு வந்து விற்பார்கள். சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிடும். அந்த சுண்டலை விற்பவர் பெயர் கருப்பண்ணன்.

பாசிப்பயறு, கொண்டைக் கடலை சுண்டல் கொண்டு வருவார். எத்தனை சுண்டல்கள் கொண்டு வந்தாலும் கருப்பண்ணனுடைய கொண்டைக் கடலை சுண்டல் மிகவும் பிரசித்திப் பெற்றது. அந்த சுண்டலுக்குப் பெயரே ‘கருப்பண்ணன் சுண்டல்’ என்றே சொல்வார்கள்.

‘‘உங்கள் சுண்டல் மட்டும் இவ்வளவு ருசியாக இருக்கக் காரணம் என்ன’’ என்று துருவித்துருவி கேட்டார்கள் அந்த ஊர் மக்கள். அதற்கு ஒரு காரணம் சொன்னார்.

அந்த ஊர் கறிக்குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். ஆட்டுக் கறி தான் மிகவும் பிரசித்திப் பெற்றது. அந்த ஊர் குழம்புக்கு மிகவும் மதிப்பு அதிகம். கேட்டால் அந்த ஊர் ஆடுகள் இலை, தழைகளை சாப்பிடுவதால் தான் என்று கூறிக் கொள்வார்கள். அந்த ஊருக்கு வந்த புது மருமகளும் அதைத் தான் நம்பினாள். பிறகு ஒரு நாள் அந்த பெண்ணின் நாத்தனார் சொன்னாள். ‘இந்த ஊரில் வாங்கி வந்தவுடன் கழுவாமல் சட்டியில் போட்டு விட வேண்டும். பக்கத்தில் யாராவது இருந்தால் கறியைக் கழுவது போல் செய்ய வேண்டும். அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் கழுவிய தண்ணீரை கறிக்குழம்புடனே சேர்த்து விட வேண்டும். அந்த ஆட்டின் ரத்தமும் கொழுப்புமே ஸ்பெஷல் ருசியைக் கொடுக்கும்’ என்று வந்த மருமகள் சொன்னாள். அந்த குழம்பின் ரகசியத்தை.

அதிரச சரித்திரக் கதை:

‘அதிரசம் ஒரு பழமையான இனிப்புப் பண்டம். அதிக செலவும் இருக்காது. ஆனால் கைப் பக்குவம் பல தடவை செய்முறை செய்து பார்க்க வேண்டும். சங்க கால இலக்கியங்களிலும் இந்த அதிரசம் பற்றிய குறிப்புகள் உள்ளன. வீட்டு விஷேசங்களில் முதலிடம் பிடிக்கும் ஒரு பலகாரமாகும். தீபாவளி போன்ற நல்ல விசேஷ நாட்களிலி அண்ணன்மார்கள் தங்கள் தங்கைகளுக்கு சீர்வரிசையாகவும் கொடுப்பார்கள். வீட்டு விசேஷகங்களிலும் சீர்பலகாரமாகவும் வரிசை வைப்பார்கள்.

இதன் மூலப்பொருட்கள் பச்சரிசியும் – வெல்லமும். எண்ணெயில் சுட்டு எடுப்பார்கள். இதன் செய்முறை பக்குவம் மட்டும் யாவருக்கும் சட்டென்று வந்துவிடாது. வெல்லம் கூடினால் எண்ணெயிலேயே விண்டு போய் விடும். வெல்லத்தைக் குறைத்தால் கல் போல் ஆகி விடும். பக்குவம் பிடிபட பல வருடங்கள் ஆகும். இதன் சூட்சுமம் பாட்டி வழி வரும். மற்றபடி இது ஒன்றும் கஷ்டமான பலகாரம் அல்ல.

சுமார் 2 தலைமுறைக்கு முன்னால் ஒரு பேத்தி தனக்கு அதிரசம் மட்டும் சரியாக வருவதில்லை என்று மிகவும் குறைபட்டுக் கொண்டாள்.

நீ தனியாக ஒருநாள் ‘அடுப்பு சாமிக்கு உன் பிறப்பு உறுப்பை காட்டு பிறகு பார் அதிரசம் வரும் அழகை’ என்று ரகசியமாகச் சொன்னாள் பேத்தி.

‘போ பாட்டி’ என்று அசிங்கப்பட்டுக் கொண்டாள் பேத்தி. சிறிது நாட்களில் பேத்தியின் அதிரசம் அம்சமாகவும், சுவையாகவும் வந்தது.

விறகு அடுப்புகள் மாறினாலும் கேஸ் அடுப்பு வந்தாலும் இந்த ரகசியம் தொடர்ந்து கொண்டே வந்தது. அடுப்பு சாமி எப்போதும் இந்த விஷயத்தில் கண்ணும் கருத்துமாகவே இருப்பார்…

இந்த காலத்து பேத்தி பூஜாவும் மிகவும் குறைப்பட்டுக் கொண்டாள். தன் பாட்டியிடம் தனக்கு மட்டும் அதிரசம் விண்டு விண்டு போகிறது. உங்கள் பக்குவப்படியே வெல்லம், அரிசி சேக்கிறேன். எல்லாம் உங்கள் முறைப்படியே செய்கிறேன். ஏன் இப்படி தவறு ஏற்படுகிறது என்றே தெரியவில்லை என்று மிகவும் வருத்தமாகச் சொன்னாள். அது ஒரு பெரிய ரகசியம் உள்ளது அதை கடைப்பிடித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேத்தி பூஜாவிடம் அந்த ரகசியத்தைச் சொன்னார். பூஜாவுக்கு இது மிகவும் விரசமாகத் தெரிந்தது. பாட்டி உனக்கு அதிரசம் சரியாக வரவேண்டும் என்றால் இது மிகவும் முக்கியம் என்றாள் பாட்டி.

சிறிது நாட்கள் கழித்து பூஜா செய்த அதிரசம் பக்குவமாகவே வந்தது. இது ஒரு அறியப்படாத அடுப்பங்கறை குசும்பு தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *