செய்திகள்

சிறப்பு வேளாண் மண்டலம்: எடப்பாடி அறிவிப்பு

Spread the love

சேலம், பிப்.9–
காவிரி டெல்டா மாவட்டங்களை இணைத்து விவசாயத்தை பாதுகாக்க வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதற்காக தனி சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.
ஓசூரில் 20 கோடி ரூபாய் மலர் ஏல மையம் அமைக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.
அம்மாவின் ஆட்சியின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் பொய்களையே கூறி வருகிறார் என்றும் அவர் கூறினார்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார்.
சேலம் தலைவாசலில் 1022 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். வேளாண் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நலத்திட்ட உதவிகளையும், விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
இந்த விழாவில் 1 மணி நேரத்துக்கும் மேலாக முதலமைச்சர் பேசினார். அப்போது நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகளை புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு பேசினார். புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
மக்கள் வெள்ளம்
இந்த விழாவில் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு வழங்கிய ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் மூலம் அவர்கள் எந்த அளவுக்கு வருமானம் ஈட்டியிருக்கிறார்கள் என்று புள்ளி விவரத்துடன் கூறினார்.
இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *