செய்திகள்

‘‘சிறப்புக்குரிய விவசாய நிலங்கள்’’: பொன்னையன் தலைமையிலான வளர்ச்சி கொள்கை குழு அரசுக்கு கோரிக்கை

* கன்னியாகுமரி வாழைப்பழம் * விழுப்புரம் சிறுதானியங்கள்

* தர்மபுரி, சேலத்து மாம்பழம், தேங்காய்

‘‘சிறப்புக்குரிய விவசாய நிலங்கள்’’:

பொன்னையன் தலைமையிலான வளர்ச்சி கொள்கை குழு அரசுக்கு கோரிக்கை

சென்னை, செப். 16

‘கன்னியாகுமரியின் வாழைப்பழம், விழுப்புரத்தின் சிறு தானியங்கள், தர்மபுரி, சேலத்தின் மாம்பழம், தேங்காய்… இப்படி பன்முகத் தன்மையின் சிறப்பு விவசாய நிலங்களை உயிரி பன்ம மையங்களாக அறிவிக்க வேண்டும்’ என்று அரசுக்கு சி.பொன்னையன் தலைமையிலான மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு வலியுறுத்தியுள்ளது.மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு (முன்னாள் மாநில திட்டக்குழு), கொள்கை குழு உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டம் 2002-ல்” உயிரி பன்மம் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு, வனப் பகுதியில் உயிரி பன்மம் சட்டத்தை அமல்படுத்துதல், உயிரி பன்மம் சட்டம் தமிழகத்தில் ஒரு கண்ணோட்டம் மற்றும் உயிரி பன்ம மேலாண்மைக் குழு, மக்கள் உயிரி பன்ம பதிவேடு, உயிரி பன்ம பயன் பகிர்வு, உயிரி பன்மம் சட்டம் தொடர்பு குறித்தக் குழு விவாதக் கூட்டம் காணொளி வாயிலாக மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் (முன்னாள் மாநிலத் திட்டக் குழு) துணைத் தலைவர் சி. பொன்னையனின் தலைமையில் எழிலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முனைவர். சந்தீப் சக்சேனா, அரசு கூடுதல் தலைமை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை) முனைவர். துரைராசு, (முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்) யுவராஜ், (முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு பாதுகாவலர், வனத்துறை) அசோக் உப்ரதி, (முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைவர்) அனில் மேஷ்ராம், (உறுப்பினர் செயலர், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு) முனைவர். பு.செ. அர்ச்சனா கல்யாணி, (குழுமத் தலைவர் (நிலப் பயன்பாடு) மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு, சரயு, திட்ட இயக்குநர்) உதகமண்டலம், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வனப் பாதுகாவலர்கள், துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மக்களின் உயிரி பன்ம பதிவேட்டில் கடல் உயிரி பன்மத்தை இணைத்தல்.

சந்தன மரங்களைப் பாதுகாக்க தேதிச உயிரி பன்ம ஆணையத்தின் உயிரி பன்ம பயன் பகிர்வு நிதியிலிருந்து நிதி உதவி அளித்தல்,

உயிரி பன்ம பகுதிகளின் அழகியல் அம்சங்கள் உயிரி பன்ம பயன் பகிர்வில் சேர்த்தல்,

உயிரி பன்மங்களை ஆவணப்படுத்த போதிய அளவில் திறன்மிக்க பயிற்சி பெற்ற நபர்கள் தேவை.

மாவட்டந்தோறும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பற்றி ஆவணங்களை உருவாக்க பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

எளிய மனிதரும் பங்களிக்கும் வகையில் உயிரி பன்ம பாதுகாக்க கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

கன்னியாகுமரியின் வாழைப்பழம், விழுப்புரத்தின் சிறுதானியங்கள், தர்மபுரி மற்றும் சேலத்தின் மாம்பழம், தேங்காய் மற்றும் பல பன்முகத்தன்மையின் சிறப்பான விவசாய பகுதிகளாக அடையாளம் காணப்படுகிறது. இதுபோன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை உயிரி பன்ம மையங்களாக அறிவிக்க வேண்டும். மீன்பிடித்தல், இறைச்சி பதப்படுத்துதல் தொடர்பான பாரம்பரிய அறிவு திறன்களை ஆவணப்படுத்தப்பட்டு ஊக்கப்படுத்த வேண்டும். கொல்லிமலை போன்ற மலைவாழ் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கால்நடை பராமரிப்பு முறைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். நகர்ப்புறங்களின் உயிரி பன்மம் தமிழ்நாட்டின் முக்கிய தூணாகும் என்று அறிவுறுத்தப்பட்டது.

கொள்கை மறு ஆய்வு மற்றும் குழு விவாத தலைப்புகளை தேசிய உயிரி பன்ம ஆணையத் தலைவர், வி.பி. மாத்தூர், ஜெயஸ்ரீ வெங்கடேசன், உறுப்பினர், தமிழ்நாடு மாநில உயிரி பன்ம வாரியம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *