செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டிஜிபி, சென்னை கமிஷனர் பாராட்டு

சென்னை, மே 25

தமிழகத்தில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை அமைதியான முறையில் நடந்து முடிந்தன. இதைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டிஜிபி டி.கே. ராஜேந்திரன், தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அப்போது துணை ராணுவப் படை வீரர்களுடன் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிகையாக சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பப்பட்டனர்.

இறுதியில் பெரிய அளவில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்கள் ஏதும் இன்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் 45 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 3 இடங்களில் வைக்கப்பட் டிருந்தன. இந்த பகுதிகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில், பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முன்தினம் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட் டன. அப்போதும் போலீசார் தமிழகம் முழுவதும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். நகர் முழுவதும் சாலை சந்திப்புகளிலும் கட்சி அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையும் அமைதியாக நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து தேர்தல் வாக்குப் பதிவு மற்றும் தேர்தல் முடிவு வெளியீட்டின் போது முன்னெச்சரிக்கையாக மற்றும் சிறப்பாக பணி செய்த போலீசாருக்கு தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன், தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா, சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *