செய்திகள்

சிறந்த காவல்துறை, சாலை பாதுகாப்பு, கிராமப்புற சுகாதாரம் : விருதுகள் குவித்த அரசுக்கு பாராட்டு

சென்னை, ஜன.9–

இந்தியாவில் சிறந்த காவல்துறை, மத்திய அரசின் ஆய்வில் கிராமப்புற சுகாதாரத்தில் முதலிடம், சாலைப் பாதுகாப்பில் சிறந்த மாநிலத்திற்கான விருது என்று பல்வேறு விருதுகளைப் பெற்று, தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தி இருக்கும், அம்மாவின் அரசுக்கு இப்பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

நிர்வாகத் திறமையிலும், முதலீடுகளை ஈர்ப்பதிலும், மக்களுக்கான பல்வேறு தேவைகளை நிறைவு செய்வதிலும் தமிழ்நாடு, நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முதன்மையானதாகவும் திகழ்வதை மத்திய அரசும், பல்வேறு தனியார் ஆய்வு அமைப்புகளும் மேற்கொண்ட ஆய்வுகள் அங்கீகரித்திருப்பது, அம்மாவின் அரசுக்கு கிடைத்திருக்கும் பெரும் பாராட்டாகும்.

மத்திய அரசின் நீர் மேலாண்மை பட்டியலில் முதலிடம், கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம், உணவு தானிய உற்பத்தியில் 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று ‘‘கிருஷி கர்மான் விருது’’, உடல் உறுப்பு தானத்தில் 6 ஆண்டுகளாக முதலிடம், இந்தியாவிலேயே மிகக் குறைந்த (0.5%) வேலையின்மை கொண்ட மாநிலம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வியில் சிறந்த மாநிலத்திற்கான விருது, மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை அளிப்பதில் முதலிடம், இந்தியாவிலேயே 1.43 கோடிக்கு மேல் RT—-_PCR கோரோனா பரிசோதனைகள் மேற்கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு, பாலூட்டும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைத்தமைக்கான விருது, மாற்றுத் திறனாளி நிதியுதவிக்கான தேசிய விருது, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பொருளாதார மேம்பாட்டுக்கான விருது, டாடா டிரஸ்ட் ஆய்வின் படி இந்தியாவில் சிறந்த காவல்துறை, மத்திய அரசின் ஆய்வில் கிராமப்புற சுகாதாரத்தில் முதலிடம், சாலைப் பாதுகாப்பில் சிறந்த மாநிலத்திற்கான விருது என்று பல்வேறு விருதுகளைப் பெற்று, தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தி இருக்கும், அம்மாவின் அரசுக்கும், சிறந்த நிர்வாகத்தை தங்களது உழைப்பின் மூலம் நல்கிவரும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இப்பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *