வர்த்தகம்

சிமெண்ட் உற்பத்தி ; வளர்ச்சி பாதையில் டால்மியா பாரத் நிறுவனம்

திருச்சி, பிப். 5-–

இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான டால்மியா பாரத் நிறுவனத்தின் வளர்ச்சியானது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதோடு அதன் லாபமும் உயர்ந்து வருகிறது.

31 டிசம்பர், 2020-ல் முடிந்த காலாண்டு மற்றும் 9 மாதங்களுக்கான ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அது குறித்த விவரம் வருமாறு:-

இந்த காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை வருவாய் 14 சதவீதம் உயர்ந்துள்ளது. வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை ஆகியவற்றிற்கு முந்தைய வருவாயானது 457 கோடி ரூபாயில் இருந்து 51 சதவீதம் உயர்ந்து 691 கோடி ரூபாயாக உள்ளது. வரிக்கு பிந்தைய லாபமானது 7 மடங்கு உயர்ந்து 183 கோடி ரூபாயாக உள்ளது.

இது குறித்து டால்மியா பாரத் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புனித் டால்மியா கூறுகையில்,

எங்களின் வளர்ச்சியானது 14 சதவீதம் உயர்ந்துள்ளது. வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை ஆகியவற்றிற்கு முந்தைய வருவாயானது 51 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. திறன் பயன்பாடானது 32 சதவீதத்தில் இருந்து 81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிதி ஆண்டில் நாங்கள் ரூ.1379 கோடி கடனை திரும்ப செலுத்தி உள்ளோம். 31 டிசம்பர், 2020 அன்று எங்களின் நிகர கடனானது வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை ஆகியவற்றிற்கு முன் 0.56 மடங்காக உள்ளது என்று தெரிவித்தார்.

டால்மியா சிமெண்ட் (பாரத்) குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மகேந்திர சிங்கி கூறுகையில், எங்களின் பிரீமியம் தயாரிப்புகள் ஆண்டுக்கு 66 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

மேலும் எங்கள் நிறுவனம் புதைபடிவ எரிபொருள் மாற்றீட்டில், மாற்று எரிபொருள்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் அதன் வளர்ச்சியைதக்க வைத்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையில் எங்கள் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *