செய்திகள்

சின்னாளபட்டியில் நகர் முழுவதும் கொரோனா வைரஸ் ஒழிப்பு கிருமி நாசினி மருந்து தெளிப்பு

Spread the love

சின்னாளபட்டி, மார்ச்.26–

சின்னாளபட்டியில் நகர் முழுவதும் கொரோனா வைரஸ் ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது தூய்மைப் பணியாளர்கள் கவச உடையுடன் மருந்துகள் அடித்து வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் மெத்தனத்தால் பேரூராட்சி நிர்வாகம் கொரோனா வைரஸ் ஒழிப்பதில் அதிகம் சிரமப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் சிறப்புநிலை பேரூராட்சியில் கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பேரூராட்சி நிர்வாகம சிறப்பாக செயல்படுத்தி அசத்தி வருகிறது. அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருக்களில் கொரோனா வைரஸ் நோய் கிருமி நாசினி மருந்துகளை தூய்மை பணியாளர்கள் மூலம் அடிக்க ஏற்பாடு செய்து போர்க்கால நடவடிக்கை போல் அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி மருந்துகள் அடிக்கப்பட்டது.

இதுபோல வடிகாலில் தேங்கியுள்ள கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டு அந்த இடங்களிலும் கிருமி நாசினி மருந்துகள் அடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் தூய்மை பணியாளர்கள் கொரானா வைரஸ் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

விழிப்புணர்விற்கு செல்லும் தூய்மைப்பணியாளர்கள் முககவசம் அணிந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்பு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் நோய் ஒழிப்பதில் மெத்தனம் காட்டினாலும் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் மட்டும் அதிக அக்கறையுடன் இந்த நோயை பரவாமல் தடுப்பதில் பம்பரம் போல் சுழன்று பணியாற்றி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *