செய்திகள்

சின்னாளபட்டியில் சமூகப் பரவலாக மாறி வரும் கொரோனா தொற்று: மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுகோள்

சின்னாளபட்டி, ஜூலை.1–

சின்னாளபட்டியில் சமூகப்பரவலாக மாறிவரும் கொரோனா தொற்றை தடுக்க மருத்துவ அதிகாரிகள் கொரோனா தொற்று உள்ள பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கொரோனா தொற்று உள்ள பகுதிகளில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கடந்த 3 மாத காலமாக கொரோனா தொற்று இல்லாத நகரமாக இருந்து வந்தது. பெங்களுர் மற்றும் சேலம் இது தவிர வெளி நாடுகளில் இருந்து வந்த மாணவர் மூலம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக 2வது வார்டு பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போது சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் சின்னாளபட்டிக்கு நள்ளிரவில் ஆட்கள் வரத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நள்ளிரவி;ல் சென்னை மற்றும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவது குறித்து சுகாதார ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்தால் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் புகார் செய்கின்றனர். மேலும் கொரோனா தனிமைபடுத்தப்பட்ட பகுதி, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தங்க வைக்கும் பகுதிக்கு வட்டார மருத்துவ அதிகாரியோ, சுகாதார துறை அதிகாரிகளோ ஆய்வு செய்வதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் சொல்லும் பதிலைத்தான் வட்டார மருத்துவ அதிகாரிகள் தங்களின் மேலதிகாரிகளுக்கு சொல்வதால் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளின் உண்மை நிலவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையாக தெரிவதில்லை. பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தான் கொரோனா தொற்று உள்ள பகுதிகளில் கிருமிநாசினி மருந்துகளை அடித்துவருகின்றனர். தற்போது கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இது தவிர சின்னாளபட்டியில் கொரோனா பாதிக்கப்பட்ட 2வது வார்டு பாரதி நகர் மற்றும் 5வார்டு ஜீவா நகர், வடக்குத்தெரு பகுதியில் வட்டார மருத்துத்துறை அதிகாரி தலைமையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதவிர கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் கபசுரகுடிநீர்வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *