மோகன் திருவல்லிக்கேணியில் பஸ்ஸை பிடிக்க நின்று கொண்டிருந்தான். பஸ் வந்தபாடில்லை. ஏதேதோ சிந்தனை செய்துகொண்டே நெடுநேரம் நின்ற பின் பஸ் ஆடி அசைந்து வந்துக் கொண்டிருந்தது.
பஸ்ஸைப் பிடித்து, அதில் ஏறி நந்தனம் வந்தடைந்தான். அவன் சிந்தனைகள் பறந்து கொண்டிருந்தன.
அம்மா ராணி, டேய் மோகன், பொழுது போகவில்லையா, கேரம்போர்டு, செஸ் விளையாடு என்றாள்.
‘போம்மா’ என கூறி ஓவியர் ஆக வேண்டுமென கார்ட்டூன் ஓவியம் போல, ரூமில் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.
‘நாம் பெரிய ஓவியர் ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் சிந்தனையை தட்டிவிட, படித்த புத்தகம் பற்றிய சிந்தனைகள் வெளிவர அதிலுள்ள தலைவர்கள், கவிஞர்கள், புலவர்கள், பாரதி, அண்ணா இவர்களின் கருத்துக்களை வாயில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான் ’’ மோகன்.
அம்மா, டேய் ஓவியம், ஓவியம் என சுவற்றை எல்லாம் கலர் பென்சில்களால் கிறுக்கிக் கொண்டிருக்கிறியே, இந்தா நாளிதழைப் படித்து பார். புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்கிப் படி உருப்படுவே என்றாள் அம்மா.
‘சரிம்மா’ எப்ப புத்தகங்கள் காட்சி போடுகிறார்களோ அப்ப, முயற்சி செய்கிறேன்’’. ‘‘முயற்சி என்று சொன்னியே நீ சோடை போக மாட்டாய்’’.
இந்த வருடம் நாளிதழை பார்த்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் தான். மீண்டும் கலர்கள் வைத்து ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தான்.
அம்மா,‘‘ டேய் உனக்கு ஓவியம், வராது. ஓவியத்துக்கு உன்னால் உயிர்கொடுக்க முடியாது’’ என்றாள்.
நீ வரைந்தால் கண் பெரியதாகவும் மூக்கு நீண்டும் உடல் சரியான பாகம் வரவில்லை. ஓவியத்தை விட்டு விடு. நல்ல கவிதைகள், கட்டுரைகள், உவமைகளை படிக்க, எழுத கற்றுக்கொள். நீ நல்லா வருவே எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றாள்.
இவன் அம்மா புத்தக ஸ்டாலுக்கு கொடுத்த பணம், ஓவியம் என்ற பெயரில் நண்பர்கள் இவன் காசை செலவழித்துவிட்டனர்.
வீட்டுக்கு சென்றான்மோகன்.
‘‘டேய், படித்தால் உருப்படுவே என்றேன். இப்படி உருப்படாத வந்து நிக்கிறியே? மோகன் சங்கட பட்டுக் கொண்டான். உடனே, சிந்தனையை தட்டிவிட, அம்மா, இப்ப உண்மையா புத்தகங்கள் வாங்க காசு கொடுங்கள், நான் உருபுடுவேம்மா என என் சிந்தனை சொல்கிறது. ஒரு முறை எனக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்’’.
அம்மா,‘‘ சரி இந்தா இதில் 1000 ரூபாய் இருக்குது, புத்தகங்கள் வாங்கிப் படி, படி, படி விடாது படி. நீ கண்டிப்பா ஜெயிப்பே. ஜெயிச்சாகணும். மகனை உச்சி முகர்ந்தாள். மோகனின் மனம் வழிகாட்டியது. புத்தகங்கள் வாங்கி படிக்க ஆரம்பித்தான். நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக எழுதத் தொடங்கினான்….
எழுதினான். எழுதி அம்மாவிடம் காட்டினான். அம்மா படித்துப் பார்த்தாள்.
‘‘நன்றாக இருக்கிறது’’ என்று அம்மா ஊக்கப்படுத்தினாள்.
இவன் பல நாளிதழ்களில் எழுதி எழுதி ஓரளவு ஜெயித்தான்.
நூலகம் போய்ப்படி என கட்டளையிட்டாள் அம்மா.
மோகன் அதையும் செய்துகொண்டே எழுதினான்….
மோகன் இப்போது தனி மனிதல்ல. இவன் படைப்புகளை அம்மா மட்டுமல்ல; ஏராளமானோர் படித்து ரசிக்கத் தொடங்கினார்கள்.
இவன் சிந்தனைகள் சிகரம் தொட்டது.