செய்திகள்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை, ஏப். 22–

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலில், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். குறிப்பாக சித்ரா பௌர்ணமி தினத்தில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிரிவலம் செல்வர்.

கிரிவலத்துக்கு தடை

நடப்பாண்டு சித்ரா பௌர்ணமி வரும் 26 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் 2.16 மணிக்கு துவங்கி, மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை 9.59 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சித்ரா பெளர்ணமியையொட்டி, ஏப்ரல் 26, 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சித்ரா பௌர்ணமியையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் யாரும் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *