சென்னை, ஏப். 14–
சித்திரை ஆண்டுப்பிறப்பான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற சூழல்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.
இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி, மீண்டும் தங்கம் விலை உயர்ந்து, வரலாறு காணாத உச்சம் தொட்டது. கடந்த சனிக்கிழமை சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,770-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சித்திரை முதல் நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.