செய்திகள்

சித்திரகுப்தர் கோவிலில் விசேஷ அபிஷேகம்: வாலாஜாபாத் பா.கணேசன் அன்னதானம் வழங்கினார்

Spread the love

காஞ்சீபுரம், பிப்.20-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் 24ம் தேதி வருகிறது. அதையொட்டி காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக பொருளாளர் வீ.வள்ளிநாயகம் ஏற்பாட்டின் பேரில், இன்று காலை காஞ்சீபுரத்தில் சித்திரகுப்தர் கோவிலில் விசேஷ அபிஷேகம் நடந்தது. பிறகு மலர் அலங்காரத்தில், சித்ரகுப்தர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்பு செயலாளர்கள் வி. சோமசுந்தரம், மைதிலிதிருநாவுக்கரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் அய்யப்பன்தாங்கல் டாக்டர் ஏ.என்.ஈ.பூபதி, பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு டவுன் வங்கி தலைவர் வி.பாலாஜி, காஞ்சீ நகர மாணவரணி செயலாளர் எஸ்.ஜெயராஜ், அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் விஸ்வநாதன், காஞ்சீ நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கோல்ட் ரவி, கவிஞர் எஸ்.முருகவேள், கூரம் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிறகு ஏழைகளுக்கு அறுசுவை உணவுகளை மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், பொருளாளர் வீ.வள்ளிநாயகம் ஆகியோர் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *