வாழ்வியல்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய இந்திய மரபு மருத்துவ முறைகளில் மருந்துகளைத் தயாரித்து வரும் இம்காப்ஸ்

அலோபதி மருத்துவம் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாக மரபு மருத்துவ முறைகளே மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தன.

அந்த வகையில் நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்திய மருத்துவ முறை மருந்துகள், இன்றைக்கும் குறைந்த விலையில் கிடைப்பதற்குக் காரணமாக இருப்பது கூட்டுறவு நிறுவனமான இம்காப்ஸ் (IMCOPS).

வாதம், பித்தம், கபம் சமச்சீரற்ற நிலையில் இருப்பதே பல நோய்களுக்கும் காரணம் என்பதை பட்டறிவின் மூலமாக அறிந்து, அதற்கான மருந்துகளை தங்களின் அனுபவம் மூலமாகக் கண்டு பாடல்களாக புனைந்திருக்கிறார்கள் நமது சித்தர்கள். ‘எவனெவனுக்கு எது எது கிடைக்கணுமோ அது அது அவனவனுக்குக் கிடைக்கும். நீ பறிக்கவும் முடியாது. தடுக்கவும் முடியாது’ என்பது சித்தர்கள் வாக்கு.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகிய இந்திய மரபு சார்ந்த மருத்துவ முறைகளில் மருந்துகளைத் தயாரித்து வருகிறது இம்காப்ஸ். லாபநோக்கமின்றி கடந்த 75 ஆண்டுகளாக இயங்கிவரும் `இம்காப்ஸ்’-இன் முழுப் பெயர் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து உற்பத்தி நிலையம் மற்றும் பண்டகச்சாலை.

மூன்று வகை மருத்துவ முறை

டெல்லியில் உள்ள வேளாண் துறையின்கீழ் இம்காப்ஸ் இயங்கிவருகிறது. 224 மருத்துவர்களோடு (மெம்பர்) கேப்டன் சீனிவாசமூர்த்தியால் 1944-ல் செப்டம்பர் 12 அன்று இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இன்றைக்கு 17 ஆயிரம் மருத்துவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தியாவிலேயே சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கும் ஒரே கூட்டுறவு மருந்து ஆலை இம்ப்காப்ஸ்தான். இதுவே இம்ப்காப்ஸின் தனிச்சிறப்பு.

இந்தியா முழுவதும் 24 இடங்களில் இந்த அமைப்பின் கடைகள் உள்ளன. சென்னை திருவான்மியூரிலும் ஆந்திரத்தின் தாடப்பள்ளியிலுமாக இரண்டு பிரிவுகளில் மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆந்திரத்தின் தாடப்பள்ளியில் உள்ள ஆலை 1966-ல் தொடங்கப்பட்டது. 16 இயக்குநர்களின் தலைமையில் இயங்கிவரும் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பொன்சிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *