செய்திகள்

சிதம்பரம் நடராஜருக்கு ரூ.7 லட்சத்தில் பவள மாலை: நைஜீரிய தம்பதி வழங்கினர்

சிதம்பரம், ஏப்.21–
சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த தம்பதியர் ரூ.7 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட பவள மாலையை நன்கொடையாக வழங்கினர்.
நைஜீரிய நாட்டில் பணியாற்றி வருபவர் பவானிசங்கர். இவ ரது மனைவி சிவசங்கரி. தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட இந்த தம்பதி, பணி நிமித்தமாக நைஜீரியாவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறினர். அங்கு குடியுரிமைப் பெற்று வசித்து வருகின்றனர். இருவரும் சிதம்பரம் நடராஜரின் தீவிர பக்தர்கள் ஆவர்.
சிதம்பரம் நடராஜருக்கு அணிவிக்க, 90 கிராம் தங்கத்துடன், 45 நைஜீரிய பவழங்களால் செய்யப்பட்ட பவழ மாலையை இத் தம்பதி காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த மாலை 45 நைஜீரிய பவளங்களைக் கொண்டது. இந்தப் பவளங்கள் 90 கிராம் தங்கக் கம்பியால் இணைக்கப்பட்டுள்ளன. 3 அடி நீளம் உடைய இந்த மாலையின் இந்திய மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். கோயில் பொது தீட்சிதர்கள் முன்னிலையில் இதனை அவர்கள் நேற்று கோயில் வசம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து பவழ மாலையை கோயில் பொது தீட்சிதர் பரமேஸ்வர், முன்னாள் செயலர் பாஸ்கர் தீட்சதர், பொது தீட்சிதர்கள் செயலர் பாலகணேச தீட்சிதர் ஆகியோர் நடராஜர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து நடராஜப் பெருமானுக்கு அணிவித்தனர். அப்போது அங்கு இருந்த ஏராளமான பக்தர்களும் அதைக் கண்டு தரிசனம் செய்தனர். இந்த பவழ மாலை, நடராஜருக்கு நாள்தோறும் சாற்றப்படும் எனத்தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *