செய்திகள்

‘‘சிங்கிங் ஸ்டார்ஸ்’’ இசை நிகழ்ச்சி: நாளை முதல் ‘கலர்ஸ்’ டிவியில் ஒளிபரப்பு

சென்னை, மார்ச். 15–

‘‘சிங்கிங் ஸ்டார்ஸ்’’ இசை நிகழ்ச்சி நாளை (16ந் தேதி) முதல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிரபல பாடர்கள் சக்திஸ்ரீகோபாலன், தி.அனந்து ஆகியோர் நடுவராக இடம்பெற இரவு 8 மணிக்கு உங்கள் இல்லம் தேடி வருகிறது. ஒருவர் அல்லது இருவர் ஜோடிகளாக தங்கள் இசைத் திறமையை வெளிப்படுத்தி பாடுவார்கள்.

‘‘சிங்கிங் ஸ்டார்ஸ்’’ என்பது, எங்களின் மற்றுமொரு தனித்துவமான ரியாலிட்டி ஷோவாகும். ஒருவரது பாடும் திறனை இது வெளிப்படுத்த மேடையமைத்து தருவதோடு, 2 பேரின் ஒருங்கிணைந்த உறவின் ஆக்கப்பூர்வ, நேர்மறை தன்மையை நேர்த்தியாக வெளிப்படுத்த வகை செய்யும் என்றார் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரன். தொலைக்காட்சி தளத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை தொழிலிலும் கூட மிகப்பெரிய மாற்றத்தை இது நிச்சயம் வழிவகுக்கும் என்றார் சந்தோஷ் நாராயணன்.

பாடகர் சக்திஸ்ரீ கோபாலன் கூறுகையில், இந்நிகழ்ச்சி இசை தொடர்பான ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ஒரு புதிய முகத்தை நிச்சயம் தரும். பார்வையாளர்களை இது மகிழ்ச்சியிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தும் என்று அவர் கூறினார். இந்த இசை பயதண்தைத் தொடர நான் தயாராக பெரும் உற்சாகத்தோடு இருக்கிறேன் என்றார்.

அனந்து பேசுகையில், இசை தொடர்பான ரியாலிட்டி நிகழ்ச்சியின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியமைப்பதாக இது இருக்கும். மிகச்சிறந்த திறமைசாலிகள் சிலரை இது நிச்சயம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். பாடகர்களை சவாலுக்குட்படுத்துவதன் மூலம் அவர்களது உண்மையான சாத்திய திறனை எட்ட வைக்கும். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்காகத்தான் நான் காத்திருக்கிறேன். புதுமை வடிவத்தில் உருவாகும் இந்நிகழ்ச்சியானது, திறனும், ஆர்வமும் உள்ள பாடகர்கள் அவர்களது கனவுகளை நிஜமாக்குவதற்கு ஒரு தளத்தை நிச்சயமாக வழங்கும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *