சிங்கப்பூர், மே 20–
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. முதலில் இதன் தாக்கம் சற்று குறைவாக இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பரவியது. இந்த வைரஸ் தொற்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடுத்ததடுத்து உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து உலக நாடுகளில் இந்த நோய்தொற்று வேகமாக பரவ தொடங்கியது. இந்த கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பின்னர் பல்வேறு ஆராய்ச்சியாளர் ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்த பிறகு தான் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்த தொற்றின் தாக்கம் இன்றுவரை உள்ளது. முழுமையாக நீங்கவில்லை. இந்த நிலையில் ஹாங்காங்கில், சிங்கப்பூரில் ( கோவிட்-19 )கொரோனா வைரஸ் நோய்தொற்றில் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், சிங்கப்பூர், ஹாங்காங்கில் 1400 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர், தாய்லாந்தில் கட்டுப்பாடு
மேலும் சிங்கப்பூர், தாய்லாந்து கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவிலும் கொரோனா பரவல் கண்டுடறியப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா,கர்நாடகா, தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சேலத்தில் 9 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தது கண்டுடறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கொரோனா தொற்று குறித்து பொதும்மக்கள் அச்சமடைய தேவை இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நேற்று நிலவரப்படி( மே 19 ) 257 பேர் லேசான கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.