சிங்கப்பூர், செப். 14–
சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பொறுப்பேற்கிறார்.
சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பொறுப்பேற்கிறார். சிங்கப்பூரின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது.
இன்று பொறுப்பேற்பு
இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் 17.46 லட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பொறுப்பேற்க உள்ளார்.