சென்னை, அக். 15–
சிகரெட் லைட்டர் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லவா? குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:–
‘‘எனது கோரிக்கைகளை முழுமையாக ஏற்று, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய – 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளமைக்காக ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முடிவு வரவேற்புக்குரியது. இதனால் தமிழ்நாட்டின் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலுப்பெறுவதுடன், சுமார் ஒரு லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும். மேலும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குறையும்’’.
இவ்வாறுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.